Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம பிளான்.. சொன்னபடி செய்த கோலி.. அதிரடி ஆல் ரவுண்டரை அணியில் எடுத்தார்.. புதிய திருப்பம்!

Recommended Video

World Cup 2019 : Ind Vs SL : சொன்னபடி செய்த கோலி.. அணியில் செய்த மாற்றம்- வீடியோ

லண்டன்: புதிய திருப்பமாக இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது துவங்கி உள்ளது. இந்தியா ஆட போகும் கடைசி லீக் போட்டியாகும் இது.

இந்தியா ஏற்கனவே செமி பைனலுக்கு தேர்வாகிவிட்டது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் புதிய சோதனை முயற்சிகளை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 டாஸ் வென்றது

டாஸ் வென்றது

இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் களமிறங்க முடிவு செய்துள்ளது. இது பவுலிங் பிட்ச் என்பதால் இங்கு தொடக்கத்தில் பேட்டிங் செய்ய கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆனால் சேசிங் செய்வது மிகவும் கடினம்.

 என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்த போட்டியில் இந்திய அணியில் இரண்டு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி தற்போது அணியில் இருந்து சாஹல் நீக்கப்பட்டுள்ளார். அடுத்த செமி பைனல் போட்டிகளுக்கு அவர் தயாராகும் விதமாக தற்போது இந்த போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் அணியில் மீண்டும் குல்தீப் களமிறங்கி உள்ளார்.

 வேறு யார்

வேறு யார்

அதேபோல் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜா இடது கை ஸ்பின் பவுலர். இவர் இன்று அணிக்குள் புதிய ஸ்பின் ஆப்ஷனாக சேர்க்கப்பட்டு உள்ளார். அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட்டு இருக்கிறார். ஷமி அதிகமாக விக்கெட் எடுத்தாலும் கடைசி நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது இல்லை என்பதால் இந்த மாற்றம்.

 நல்ல அணி

நல்ல அணி

குல்தீப்பிற்கு ஸ்பின் பவுலிங்கில் ஜடேஜா நல்ல உறுதுணையாக இருப்பார். அதேபோல் கடைசி நேரத்தில் இவர் பேட்டிங்கும் நன்றாக செய்வார். இன்று இந்திய அணியில் இலங்கைக்கு எதிராக கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பண்ட், தினேஷ் கார்த்திக் , தோனி, பாண்டியா, பும்ரா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Saturday, July 6, 2019, 15:50 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+