Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு உதவிப்போகும் சிஎஸ்கே சிங்கம்.. டீமில் கோலி கொண்டுவரப் போகும் முக்கியமான வீரர்!

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இன்று மிக முக்கியமான மாற்றம் ஒன்று செய்யப்பட உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. உலகக்கோப்பை லீக் ஆட்டங்களில் இன்று நடக்கும் போட்டிதான் மிக முக்கியமான போட்டி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்று இந்த போட்டி நடக்குமா என்பதே சந்தேகமான விஷயம்தான். ஏனென்றால் இன்று போட்டி நடக்க இருக்கும் மான்செஸ்டர் பகுதியில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றம் முடிவு

மாற்றம் முடிவு

இந்திய அணியில் இன்று நடக்கும் போட்டியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வாப்புள்ளதாக செய்திகள் வருகிறது. முக்கியமாக இந்திய அணியில் பவுலிங் ஆர்டரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இன்று போட்டி நடக்கும் மான்செஸ்டர் மைதானம் ஸ்பீட் பவுலிங்கிற்கு ஏற்ற மைதானம் என்பதால், இந்த மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

என்ன இப்போது

என்ன இப்போது

இப்போது இந்திய அணி இரண்டும் அல் ரவுண்டர், இரண்டு ஸ்பின் பவுலர், இரண்டு ஸ்பீட் பவுலர் என்று களமிறங்கி வருகிறது. குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய இரண்டு வீரர்களும் இந்திய அணியில் ஸ்பின் பவுலர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் ஒருவர் இன்று நீக்கப்பட வாய்ப்புள்ளது.

யார் நீக்கம்

யார் நீக்கம்

அதன்படி கடந்த இரண்டு போட்டிகளாக சரியாக பந்து வீசாத குல்தீப் யாதவ் இந்த போட்டியில் இறங்க மாட்டார் என்று கூறுகிறார்கள். அவருக்கு பதில் இந்திய அணியில் முகமது சமி களமிறங்க இருக்கிறார். இதனால் இந்திய அணி மூன்று பவுலர்களுடன் களமிறங்கும் என்கிறார்கள்.

இன்னொரு பேட்ஸ்மேன்

இன்னொரு பேட்ஸ்மேன்

அதே சமயம் இந்திய அணியில் சரியாக விளையாடாமல் இருக்கும் கேதார் ஜாதவ் இன்று ஓய்வு எடுப்பார். சாஹல் மட்டும் தனி ஆளாக ஸ்பின் அட்டாக் செய்ய முடியாது என்பதால் அவருக்கு துணையாக இன்னொரு ஸ்பின் பவுலரான ஜடேஜா களமிறக்கப்பட்டுவார் என்கிறார்கள்.ஆம் இன்று சாஹல் ஜடேஜா ஜோடி இந்திய அணியின் ஸ்பின் ஜோடியாக இருக்கும்.

பலம்

பலம்

இதன் மூலம் இந்திய அணி பவுலிங் ஆர்டரில் மட்டுமில்லாமல், 7 பேட்ஸ்மேன்கள் என்ற பேட்டிங் ஆர்டரிலும் நல்ல வலுவான அணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 16, 2019, 9:29 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+