Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க ரெஸ்ட் எடுங்க.. அவரை கொண்டு வருவோம்.. பாக். அணிக்கு எதிராக இந்தியா களமிறக்கும் ஜாம்பவான்!

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முக்கியமான வீரர் ஒருவரை களமிறக்க போவதாக தகவல்கள் வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மிக முக்கியமான நாள். கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்த மிக முக்கியமான நாள் இதுதான் என்று கூட கூறலாம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று நேருக்கு நேர் தங்களை சந்தித்துக் கொள்கிறார்கள். இந்திய போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

குல்தீப்

குல்தீப்

ஆனால் இந்திய அணியில் சில பிரச்சனைகள் தற்போது நிலவி வருகிறது. முக்கியமாக இந்திய பவுலிங் ஆர்டரில் சில பிரச்சனைகள் நிலவி வருகிறது. அதை இன்று கோலி சரிக்கட்ட இருக்கிறார். இந்திய அணியில் அவர் முக்கியமான மாற்றம் செய்ய இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

தற்போது இந்திய அணியில் குல்தீப் யாதவ் சரியான பார்மில் இல்லை. இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 100 ரன்களை விட்டுக்கொடுத்து வெறும் 1 விக்கெட்தான் எடுத்து இருக்கிறார். அவரின் இந்த பார்ம் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. ஐபிஎல் போட்டியில் இருந்தே அவர் சரியான பார்மில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட மாட்டார்

விளையாட மாட்டார்

இதனால் இன்று நடக்கும் போட்டியில் அவர் களமிறங்க மாட்டார் என்று கூறுகிறார்கள். ஆகவே இந்திய அணியில் அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை களமிறக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். போட்டி நடக்கும் மான்செஸ்டர் மைதானம் மிகவும் ஈரப்பதமாக இருப்பதால் கண்டிப்பாக ஸ்பின் பவுலரை கோலி இறக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். அதற்கு பதிலாக கோலி ஸ்பீட் பவுலரை களமிறக்க உள்ளார்.

யார் அவர்

யார் அவர்

அதன்படி இந்திய அணியில் இன்று முகமது ஷமி களமிறங்க வாய்ப்புள்ளது. இவர் கடந்த ஒரு வருடமாக நல்ல பார்மில் இருக்கிறார். இவரையும் சேர்த்து இந்திய அணி பும்ரா, புவனேஷ்வர் குமார் என்று மூன்று ஸ்பீட் பவுலரை கொண்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பின் பவுலிங் செய்ய சாஹல் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 16, 2019, 8:14 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+