Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்த ஷாக்.. தொடரும் குழப்பம்.. இந்திய அணியில் மொத்தமாக நடக்கும் மாற்றம்.. கோலி அதிரடி!

Recommended Video

WORLD CUP 2019 | தொடரும் குழப்பம்! இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி!- வீடியோ

லண்டன்: இந்திய அணியில் தொடர்ந்து நிலவி வரும் சில பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகளால் அணியில் வீரர்கள் மாற்றப்பட இருக்கிறார்கள். 11 பேர் கொண்ட இந்திய அணியின் விளையாடும் டீமில் நிறைய மாற்றங்கள் செய்ய கோலி முடிவெடுத்து இருக்கிறார் என்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நிறைய ஷாக்கிங் சம்பவங்களும் இந்த தொடரில் இதுவரை நடந்துள்ளது.

இந்தியாதான் இந்த தொடரில் மிகவும் வலிமையான அணி என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என்று இந்தியா வீழ்த்திய அணிகள் எல்லாம் மிக மிக வலுவான அணிகள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணி சென்னை சூப்பர் கிங்ஸ் போலத்தான் இந்த தொடரில் விளையாடுகிறது. அணியில் இருக்கும் வீரர்களை வைத்துக் கொண்டு, சில வீரர்கள் மட்டும் நல்ல பார்மில் இருக்க மற்ற வீரர்கள் மோசமாக சொதப்ப, அப்படி இப்படி சமாளித்து இந்திய அணி ஒருவழியாக விளையாடி வருகிறது. ரோஹித், கோலி, பாண்டியா, தோனி, பும்ரா மட்டும் இந்திய அணியில் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

என்ன மோசம்

என்ன மோசம்

இந்த நிலையில்தான் இந்திய அணி வீரர்கள் வரிசையாக காயம் அடைந்து தவித்து வருகிறார்கள். தொடக்க வீரர் ஷிகர் தவான் ஏற்கனவே காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். அதேபோல், இந்திய அணியின் முக்கியமான பவுலரான புவனேஷ்வர்குமார் காயம் காரணமாக கடந்த போட்டியில் இருந்து வெளியேறினார். இவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார். அதேபோல் பயிற்சியின் போது முகமது ஷமி காயம்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்ம் இல்லை

பார்ம் இல்லை

அதேபோல் இந்திய அணியில் வீரர்கள் சிலர் சரியான பார்மில் இருக்கிறார்கள். ஆனால் சிலர் சரியான பார்மில் இல்லை. முக்கியமாக விஜய் சங்கர் இன்னும் அச்சம் விலகாமல் விளையாடிக்கொண்டு இருக்கிறார். கேதார் ஜாதவ் ஏன் அணியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. இவர்கள் இருவரும் அணிக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறார்கள்.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

இதையடுத்து இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்ய கோலி திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி முதல் நான்கு வீரர்கள் கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பாண்டியா ஆகியோர் மாற மாட்டார்கள். அதேபோல் 5 அல்லது 6 வது இடத்தில் தோனி களமிறங்குவார். ஆனால் விஜய் சங்கர் அடுத்த போட்டியில் இறங்குவது சந்தேகம்தான் என்கிறார்கள்.

யார் வருவார்

யார் வருவார்

இதனால் அவருக்கு பதில் ஜடேஜா அணியில் இணைய வாய்ப்புள்ளது. சமயங்களில் விஜய் சங்கரை அணியில் வைத்துக் கொண்டு கேதாருக்கு பதில் ஜடேஜாவை இறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஷமி காயத்தில் இருப்பதால், புவனேஷ்வர் குமாருக்கு பதில் பெரும்பாலும் தீபக் சாகர் களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஆடும் அணி

ஆடும் அணி

இதனால் இந்திய அணியில் கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பாண்டியா, தோனி, பும்ரா, சாஹல், குல்தீப், தீபக் சாஹர், கேதார் ஜாதவ் அல்லது விஜய் சங்கர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, June 18, 2019, 12:04 [IST]
Other articles published on Jun 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+