For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வியந்து பார்த்த கிரிக்கெட் உலகம்.. அதிர்ந்து போன 9 கேப்டன்கள்.. கோலி எப்படி இதை சரியாக கணித்தார்?

உலகக் கோப்பை போட்டிகளில் நடக்க போகும் விஷயங்கள் குறித்து விராட் கோலி செய்த கணிப்பு பெரிய வைரலாகி இருக்கிறது.

லண்டன்: உலகக் கோப்பை போட்டிகளில் நடக்க போகும் விஷயங்கள் குறித்து விராட் கோலி செய்த கணிப்பு பெரிய வைரலாகி இருக்கிறது. இது மற்ற அணியின் வீரர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடைசி இரண்டு வாரங்களை நெருங்கிவிட்டது. இன்னும் சரியாக இரண்டு வாரமே போட்டிகள் இருக்கிறது.

இன்று இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையில் போட்டி நடக்க உள்ளது. மூன்று முறை தோல்வி அடைந்த இங்கிலாந்து இன்றைய போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று குறிக்கோளுடன் விளையாட உள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த வருட உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து ஆடுகளம் பேட்டிங் பிட்சாக மாற்றப்பட்டது. அதிக ரன்கள் அடிக்கப்பட்டால் போட்டியும் அதிக சுவாரசியமாக இருக்கும் என்று கருதப்பட்டது. அதேபோல் இங்கிலாந்து பாகிஸ்தான் தொடரிலும், உலகக் கோப்பையின் தொடக்கத்திலும் வரிசையாக 300+ ரன்கள் அடிக்கப்பட்டது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் அது போக போக அப்படியே மாறியது. போட்டிகள் நடக்க நடக்க மைதானத்தில் 250 ரன்கள் அடிப்பதே கடினமாக இருந்தது. 280 ரன்களை கூட சேஸ் செய்து பெரிய அணிகளால் வெற்றியை ருசிக்க முடியவில்லை என்பது குறிப்பித்தக்கது. 230 ரன்களை கூட எடுப்பது சிரமமான காரியமாக மாறியுள்ளது.

எப்போது சொன்னார்

எப்போது சொன்னார்

போட்டிகள் இப்படித்தான் மாறும் என்று கோலி ஏற்கனவே கூறி இருந்தார். உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் அவர் அளித்த பேட்டியில், உலகக் கோப்பையின் இரண்டாம் பாதியில் 250+ ரன்களை அடிப்பதே சிரமம். அந்த அளவிற்கு அழுத்தமான சூழ்நிலை நிலவும். இதனால் 250 ரன்களை எல்லாம் சேஸ் செய்வதே பெரிய கடினமான காரியமாக மாறும், என்று குறிப்பிட்டார்.

ஆம் உண்மை

ஆம் உண்மை

அப்போது மற்ற கேப்டன்கள் யாரும் கோலியின் பேச்சை சரியாக மதிக்கவில்லை. ஆனால் தற்போது வரிசையாக 7 போட்டிகளில் லோ - ஸ்கோர் போட்டிகளில். இந்தியா மேற்கு இந்திய தீவுகள், இந்தியா ஆப்கானிஸ்தான் , இலங்கை இங்கிலாந்து, பாகிஸ்தான் இங்கிலாந்து , பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மேற்கு இந்திய தீவுகள் என்று அணிகள் மோதிய போட்டிகள் எல்லாம் லோ-ஸ்கோர் போட்டிகள் ஆகும்.

எப்படி

எப்படி

இதை எப்படி சரியாக கோலி தொடருக்கு முன்பாகவே கணித்தார் என்று கேப்டன்கள் எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். எப்படி அவரால் இதை சரியாக சொல்ல முடிந்தது என்றும் பலரும் கேட்டனர். இது தொடர்பாக தற்போது கோலியே பேட்டி அளித்து இருக்கிறார். அதில், எனக்கு போட்டிகள் இப்படித்தான் செல்லும் என்று தெரியும். உலகக் கோப்பை தொடரில் போக போக அழுத்தம் அதிகமாக இருக்கும். அதை வைத்து இப்படி கணித்தேன், என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, June 30, 2019, 7:49 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
ICC World Cup 2019: Kohli predicts the second party of the world cup very well than any other captain in the world.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+