Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதெல்லாம் நடக்காது.. இப்படித்தான் போட்டிகள் முடியும்.. 1 மாதம் முன்பே கணித்த கிங் கோலி.. ஆச்சர்யம்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

லண்டன்: உலகக் கோப்பை போட்டிகள் குறித்து இந்திய கேப்டன் கோலி சொன்ன கருத்து கணிப்பு ஒன்று அப்படியே அவர் சொன்னபடி நடந்து வருகிறது.

கடைசி ஒரு வாரமாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிக தீவிரமாக நடந்து வருகிறது. இங்கிலாந்தை இலங்கை வீழ்த்தியது, இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி, நியூசிலாந்து மேற்கு இந்திய தீவுகள் போட்டி எல்லாம் மிக மிக நெருக்கமான போட்டிகள்.

ஆனால் இந்த போட்டிகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஒரு மாதம் முன்பே சரியாக கணித்து இருந்தார் என்றுதான் கூற வேண்டும். போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அவர் கட்சிதமாக கணித்து விளையாடி வருகிறார்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

உலகக் கோப்பை போட்டிக்கு முன் 10 அணிகளை சேர்ந்த கேப்டன்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அவர்களிடம் உலகக் கோப்பை தொடர் குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது . அணியின் பலம் எப்படி, அணியின் திட்டங்களை என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார்கள்.

என்ன கேள்வி

என்ன கேள்வி

இந்த நிலையில் இதில் கோலியிடம் இங்கிலாந்து பிட்ச் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் இங்கிலாந்து பிட்ச் எல்லாம் பேட்டிங் பிட்சாக மாற்றப்பட்டு இருக்கிறது. இங்கு பவுலர்கள் எளிதாக 350+ ரன்களை கொடுக்கிறார்கள். அதை எளிதாக இரண்டாவது இன்னிங்ஸ் பிடிக்கும் அணி சேஸ் செய்து விடுகிறது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு பதில் அளித்த கோலி ஆம் இப்போது மைதானம் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கிறது. ஆனால் இது போக போக மாறும். அதே சமயம் இது உலகக் கோப்பை. இதில் போக போக விறுவிறுப்பு அதிகம் ஆகும். அப்படிப்பட்ட நேரத்தில் பெரிய ஸ்கோர்களை எடுப்பது மிகவும் கடினம். பெரிய ஸ்கோர்களை சேஸ் செய்வது கடினமாக இருக்கும். 250 ரன்களை எடுப்பதே கடினம் என்று அப்போது கோலி கூறினார்.

மிக சரி

மிக சரி

அப்போது கோலி எதை வைத்து அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் கடைசியாக உதாரணமாக சமீபமாக நடந்த இங்கிலாந்து இலங்கை போட்டியில் இலங்கையின் 232 ரன்களை இங்கிலாந்தால் எடுக்க முடியவில்லை, இந்தியாவின் 224 ரன்களை ஆப்கானிஸ்தானால் எடுக்க முடியவில்லை. அதேபோல் நியூசிலாந்தின் 291 ரன்களை மேற்கு இந்திய தீவுகளால் எடுக்க முடியவில்லை.

வாவ்

வாவ்

இதனால் கோலி எப்படி இவ்வளவு துல்லியமாக கணித்தார். கோலி எப்படி போட்டிகளை சரியாக உணர்ந்து இருக்கிறார். இந்த திறமையை அவர் எங்கிருந்து பெற்றார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Story first published: Sunday, June 23, 2019, 17:06 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+