Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனால் அப்படி மட்டும் நடந்தால் எங்களை அசைக்கவே முடியாது.. கோலி மாஸ் பிளான்!

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் கோலி வைத்திருக்கும் திட்டம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைய சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. தோனி கிளவுஸ் சர்ச்சை, மழையால் போட்டி ரத்தாவது தொடர்பான சர்ச்சை பல பிரச்சனைகள் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில் நேற்று மழையால் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோத வேண்டிய போட்டி தடை பட்டது . இந்த போட்டியில், நேற்று டாஸ் கூட போடப்படவிலை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் கையில் காயம் பட்டது. இந்த காயம் இன்னும் சரியாக குணமாகவில்லை. தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அப்போது தவானுக்கு கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது.

மோசமானது

மோசமானது

போட்டியின் முடிவில் இந்த காயம் பெரிதாகி, பெரிய அளவில் வீங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அவர் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் எப்போது வருவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

திட்டம் என்ன

திட்டம் என்ன

இந்த நிலையில் இவரை வைத்து இந்திய அணியின் கேப்டன் கோலி போட்டு இருக்கும் திட்டம் தற்போது வெளியாகி உள்ளது. கோலி இதுகுறித்து கூறுகையில், இந்திய அணியில் தற்போது தவான் காயத்துடன் இருக்கிறார். அவர் குணமடைவதற்கு சில நாட்கள் ஆகும். அவருக்கு கொஞ்சம் வீக்கம் பெரிதாக இருக்கிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் முழு உடல் தகுதியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை நாங்கள் சில போட்டிகளில் மட்டுமே களமிறக்க மாட்டோம் . இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் அவர் கண்டிப்பாக அணிக்கு திரும்புவார். அவரை வைத்துதான் நாங்கள் உலகக் கோப்பை தொடரின் செமி பைனல் போட்டிகளை ஆடுவோம்.

என்ன போட்டி

என்ன போட்டி

ஆம் இதுதான் எங்கள் திட்டம். அதுவரை மட்டும், இந்திய அணியில் தொடக்க வீரராக வேறு ஒரு வீரரை களமிறக்க முடிவு செய்து இருக்கிறோம் . தவான் விரைவில் சரியாவார் என்று நம்புகிறோம். தவான் மீண்டும் வந்தால் எங்களை யாராலும் வெற்றிபெற முடியாது என்று கோலி கூறியுள்ளார்.

Story first published: Friday, June 14, 2019, 10:56 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+