Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை வைத்து கதையை முடிப்போம்.. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கோலி போடும் மாஸ்டர் பிளான் இதுதான்!

லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி முக்கியமான திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக தெரிகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் ஆரவாரமாக நடந்து வருகிறது. எப்போது எந்த அணிக்கு யாருக்கு அதிர்ச்சி கொடுக்கும், புள்ளி பட்டியலில் யார் மேலே வருவார் என்று நிறைய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

முக்கியமான போட்டிகள் தற்போதுதான் நடக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக இந்திய அணியின் போட்டிகள் தொடங்கிய பின் விறுவிறுப்பு கூடி உள்ளது.

என்ன நிலை

என்ன நிலை

இந்த உலகக் கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம், ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதில் ஒரு போட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரானது. இன்னொரு போட்டி வலுவான மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

அதேபோல் இந்தியா இன்னொரு பக்கம் தனது உலகக் கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. வலுவான தென்னாப்பிரிக்கா அணியை அந்த அணி வீழ்த்தி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா இந்த தொடரில் வரிசையாக எல்லா அணியிடமும் அடிவாங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியிடம் மிக மோசமாக அந்த தோல்வி அடைந்தது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

இந்த வெற்றியை தொடர இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முக்கியமான திட்டம் ஒன்றை வைத்து இருக்கிறது. 8வது நபர் வரை அதிரடியாக ஆடும் வகையில் ஆஸ்திரேலியா பேட்டிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது. இதனால் அவர்களின் பேட்டிங் ஆர்டரை சமாளிக்க, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் வலுவாக இருக்க வேண்டும். இதனால் கோலி வித்தியாசமான திட்டம் ஒன்றை வைத்து இருப்பதாக கூறுகிறார்கள்.

எப்படி

எப்படி

அதன்படி இந்த முறை ஆஸ்திரேலியாவின் கதையை தோனியை வைத்து முடிக்க கோலி திட்டமிட்டுள்ளார். இந்திய அணி ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆடிவிட்டாலும், இன்னும் 4வது இடத்தில் யாரை இறக்குவது என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அந்த இடத்தை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தோனி நிரப்ப போகிறார் என்கிறார்கள்.

ஆம் நடக்கும்

ஆம் நடக்கும்

ஆம் அதன்படி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. ஆனால் 4வது இடத்தில் கேஎல் ராகுல் களமிறங்க வாய்ப்பில்லை. அதற்கு பதில் தோனி களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால் அவர் கோலியுடன் களத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆட்டத்தின் போக்கும் கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சூப்பர்

சூப்பர்

அதேபோல் தோனி 4வது இடத்தில் இறங்கிய நேரங்களில் எல்லாம் நன்றாக விளையாடி இருக்கிறார். கே எல் ராகுல் எல்லா இடங்களிலும் நன்றாக ஆடக்கூடியவர் என்பதால் அவர் 5 வது இடத்திலும், பாண்டியா ஆறாவது இடத்திலும் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கோலி இந்த திட்டத்தை செயல்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Sunday, June 9, 2019, 9:39 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+