Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். இதை எதிர்பார்த்து இருக்காது.. தோனியை வைத்து கோலி போடும் அசத்தல் திட்டம்.. மாஸ்டர் ஸ்டிரோக்!

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்காக இந்திய அணி முக்கியமான திட்டங்களை வகுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மிக முக்கியமான நாள். உலகில் இரண்டு முக்கிய கிரிக்கெட் அணிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று ஒன்றை ஒன்று எதிர்கொள்கிறது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரிய பரபரப்பு இருக்கும். அதற்கு ஏற்றபடி இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து இப்போதே டிவிட்டரில் எல்லோரும் பேச தொடங்கிவிட்டார்கள்.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளை வென்றுள்ளது. நியூஸிலாந்திற்கு எதிரான ஒரு போட்டி மழையால் ரத்தாகிவிட்டது. இந்த நிலையில் 5 புள்ளிகள் பெற்று இருக்கும் இந்தியா இன்று கண்டிப்பாக வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.

கோலி எப்படி

கோலி எப்படி

எப்போதும் இந்திய அணி விளையாடும் போட்டிகளில் கோலி பேட்டிங் ஆர்டரில் நிறைய மாற்றங்களை செய்வார். கோலி மீது இந்த புகார் எப்போதுமே இருக்கும். கோலி பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றுவது சரியான விஷயம் கிடையாது. இது இந்திய அணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பலர் கூறி இருக்கிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

அதேபோல் இந்திய அணியில் 4 இடத்தில் விளையாடும் வீரரை இந்திய அணி தேர்வு செய்ய இன்னும் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறது. கே எல் ராகுல் நான்காவது இடத்திற்கு தேர்வு ஆனாலும் கூட தற்போது முதல் இடத்தில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் கோலிக்கு உதவியாக தோனி களமிறங்க உள்ளார்.

திட்டம்

திட்டம்

அதன்படி இந்திய அணியில் தற்போது 4 வது இடத்தில் விஜய் சங்கர் களமிறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு பதில் இன்று தோனி களமிறங்க போகிறார் என்று கூறுகிறார்கள். தோனியை களமிறக்கி ஆட்டத்தின் போக்கை மாற்ற கோலி திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

பொதுவாக தோனி 4வது இடத்தில் இறங்கும் போது நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்து இருக்கிறார். ஐந்தாவது இடத்தை விட நான்காவது இடத்திற்கு அவர் நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இதனால் இன்று அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சர்ப்ரைஸாக களமிறங்கினால் அது போட்டியில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, June 16, 2019, 7:13 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+