For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி செய்திருப்பார்.. கோலியின் முடிவிற்கு எதிர்ப்பு.. என்ன பிரச்சனை!

வங்கதேசம் அணிக்கு எதிராக கோலி தேர்வு செய்து இருக்கும் இந்திய அணி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

Recommended Video

WORLD CUP: IND VS BAN | இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திய 59 மீட்டர்- வீடியோ

லண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிராக கோலி தேர்வு செய்து இருக்கும் இந்திய அணி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. கோலி சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டார் என்று சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக, அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

தொடக்க வீரர் ரோஹித் சர்மா 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். தற்போது கோலி, பண்ட் களத்தில் நிற்கிறார்கள். கே எல் ராகுல் 77 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி

வங்கதேசத்திற்கு எதிராக வித்தியாசமான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது வங்கதேசத்திற்கு எதிராக கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, தோனி, தினேஷ் கார்த்திக், பாண்டியா, பண்ட், புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா ஆகியோர் விளையாடுகிறார்கள்.

சூப்பர் மாற்றம்

சூப்பர் மாற்றம்

முதல்முறையாக இந்திய அணி இந்த தொடரில் ஒரே ஒரு ஆல் ரவுண்டர் பாண்டியாவுடன் களமிறங்குகிறது. அதேபோல் பாண்டியா சேர்க்காமல் 4 பவுலர்கள் இருக்கிறார்கள். இதில் மூன்று பேர் ஸ்பீட் பவுலர்கள். ஒரே ஒருவர், சாஹல் மட்டும்தான் ஸ்பின் பவுலர். கேதார் ஜாதவ் மற்றும் குல்தீப் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மோசம்

தேர்வு மோசம்

இதுதான் கோலிக்கு எதிராக குரல் கொடுக்க வைத்துள்ளது. பேட்ஸ்மேன்கள் தேர்வு, தினேஷ் கார்த்திக் தேர்வு எல்லாம் சரிதான். ஆனால் ஏன் ஒரே ஒரு ஸ்பின் பவுலர் மட்டும் எடுத்து இருக்கிறார். எந்த தைரியத்தில் ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் கோலி களமிறங்கி உள்ளார். ஸ்பீட் பவுலர்கள் சரியாக வீசவில்லை என்றால் என்ன செய்வார் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏன் மாற்றம்

ஏன் மாற்றம்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இதே மைதானத்தில்தான் போன போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்பின் பவுலிங் எடுபடவில்லை என்று கோலி இன்று ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் இறங்கி உள்ளார் . ஆனால் இன்று வங்கதேச ஸ்பின் பவுலிங் கொஞ்சமும் நன்றாகவே வேலை செய்துள்ளது. அந்த அணியில் ஸ்பீட் பவுலிங்தான் சொதப்பி இருக்கிறது. முக்கியமாக ஷாகிப் அல் ஹசன் போட்ட ஸ்பின் பவுலிங் நன்றாகவே வேலை செய்து இருக்கிறது.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

அவர் போட்ட 6 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து உள்ளார். இவர் ஓவரில் பெரிய அளவில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடிக்க முடியவில்லை. இதனால் கோலி ஒரு ஸ்பின் பவுலருடன் களமிறங்குவது சரியான நடவடிக்கையா, என்று கேள்வி எழுந்துள்ளது. அதற்கான பதில் போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.

Story first published: Tuesday, July 2, 2019, 17:47 [IST]
Other articles published on Jul 2, 2019
English summary
ICC World Cup 2019: Kohli's team selection against Bangladesh today raises too many questions.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X