Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

''ஏ கேம்'' விளையாட போகிறோம்.. உங்களால் கணிக்க முடியாது.. கோலி சொன்ன பிளான்.. இதுதான் பின்னணி!

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ : Kohli's Super Plan :உங்களால் கணிக்க முடியாது..கோலி சொன்ன திட்டம்-வீடியோ

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக ''ஏ கேம்'' விளையாட போகிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வேகமாக இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்று முதல் செமி பைனல் போட்டி நடக்க உள்ளது.

இந்தியா நியூசிலாந்து இடையே இன்று நடக்கும் போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா இதில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்று தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டி குறித்து தற்போது இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்துள்ளார். அதில், எங்கள் இரண்டு அணிகளும் மிகவும் வலுவான அணிகள்தான். முக்கியமாக நியூசிலாந்து சென்ற முறை இறுதிப் போட்டி வரை சென்றார்கள். அவர்களை வீழ்த்துவது எளிதல்ல. அவர்களுக்கு எதிராக நாங்கள் சில திட்டங்களை வகுத்து இருக்கிறோம்.

என்ன திட்டம்

என்ன திட்டம்

நாங்கள் ''ஏ கேம்'' விளையாடினால் மட்டுமே நியூசிலாந்து போன்ற அணிகளை வெல்ல முடியும். நாங்கள் ஒரு இடத்தில் கூட சிறிய தவறு செய்ய கூடாது. ஒரே ஒரு தவறு செய்தால் கூட போட்டி மொத்தமாக கையை விட்டு நழுவ வாய்ப்பு இருக்கிறது. அதை இந்த முறை நாங்கள் செய்ய மாட்டோம். சில திட்டங்களை தயார் நிலையில் வைத்து உள்ளோம்.

மாற்ற முடியாது

மாற்ற முடியாது

ஒரு வீரர் மட்டுமே அணியை மொத்தமாக வெற்றியை நோக்கி நகர்த்த முடியாது. எல்லா வீரர்களும் அணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். டாஸ் வெல்லும் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதற்காக டாஸை மட்டும் நம்பி இருக்க முடியாது. டாஸ் எப்படி வந்தாலும் அனைத்திற்கும் நாங்கள் தயாராக இருப்போம்.

இரண்டும்

இரண்டும்

டாஸை உங்களால் கணிக்க முடியாது. பேட்டிங், பவுலிங் இரண்டில் எது முதலில் வந்தாலும் அதற்கு நாங்கள் தயாராக இருப்போம். இந்த போட்டிக்கு முன்பு நிறைய அழுத்தம் இருக்கும். அது இருப்பதுதான் நல்லது. அந்த அழுத்தத்துடன்தான் நாங்கள் விளையாட போகிறோம், என்று கோலி பேட்டி அளித்துள்ளார்.

Story first published: Tuesday, July 9, 2019, 10:35 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+