ஏன் இப்படி தவறு செய்தீர்கள்.. அவருக்கு எதனால் வாய்ப்பளிக்கவில்லை.. கோலியின் முடிவால் குழப்பம்!
Recommended Video
லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். கோலி சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் புகார் அளித்து இருக்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் பாகிஸ்தான் இந்தியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டி இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணி பேட்டிங் இறங்கி ஆடி வருகிறது.

எப்படி ஆடியது
இந்த நிலையில் இன்று இந்திய அணியில் ஒரு ஸ்பின் பவுலர்தான் களமிறக்கப்படுவார் என்று கூறினார்கள். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் இன்று முகமது ஷமி களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. மான்செஸ்டர் பிட்ச் ஸ்பீட் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதனால் ஷமி களமிறக்கப்படுவார் என்று கூறினார்கள்.

வேகப்பந்து வீச்சாளர்
இந்திய அணியின் வேகப்பந்து ஆர்டருக்கு ஷமி பெரிய தூணாக இருப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அணியில் ஷமி இன்றும் களமிறக்கப்படவில்லை. அணியில் ஒரே ஒரு மாற்றம்தான் செய்யப்பட்டு இருக்கிறது. தவானுக்கு பதில் விஜய் சங்கர் களமிறங்கி இருக்கிறார்.

2 ஸ்பின் பவுலர்
இந்த நிலையில் இந்திய அணியில் குல்தீப் மற்றும் சாஹல் என்று ஸ்பின் பவுலர் இரண்டு பேர் இருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. கோலி ஏன் இந்த முடிவை எடுத்தார் . பிட்ச் ஸ்பீட் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது கோலி ஏன் இப்படி செய்தார் என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

கிரிக்கெட் வல்லுநர்
அதேபோல் கிரிக்கெட் வல்லுனர்களும் இதே கேள்வியை எழுப்பி உள்ளனர். மேலும் கடந்த சில போட்டிகளாக குல்தீப் யாதவ் சரியாக விளையாடவில்லை. அப்படி இருக்கும் போது ஏன் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளீர்கள் என்றும் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதே சமயம் பாகிஸ்தானும் இரண்டு ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications