டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்!
லண்டன்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களுக்கு செக் வைக்க பாகிஸ்தான் அணி வித்தியாசமான திட்டம் ஒன்றை வகுத்து இருக்கிறது.
இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உலகக் கோப்பை போட்டியில் நடக்கும் லீக் ஆட்டத்தில் மோத இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி புதிய சாதனை படைக்கும்.
அதே சமயம் இந்திய அணி இந்த போட்டியில் மிக எளிதாக வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போட்டியின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கருதப்படுகிறது .

சிறப்பான வீரர்கள்
பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அணிதான் அனைத்து விதங்களிலும் வலுவான அணி. இரண்டு அணியின் பவுலிங் ஆர்டரும் ஒரே மாதிரி வலுவாகத்தான் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் அளவிற்கு வலுவானது கிடையாது. பாகிஸ்தான் அணியில் மிடில் ஆர்டர் மிக மோசமாக இருக்கிறது.

எப்படி செய்கிறார்கள்
முக்கியமாக இந்திய அணியின் முதல் மூன்று வீரர்களை சமாளிக்கவே பாகிஸ்தான் அணி அதிகம் கஷ்டப்படும் என்று கூறலாம். பாகிஸ்தானுக்கு எதிராக சராசரியாக 104 ரன்களை கோலி அடித்து இருக்கிறார். அதனால் இன்றைய போட்டியில் கோலியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்படும்.

கோலி வீடியோ
இதற்காக தற்போது கோலி பயிற்சி செய்யும் வீடியோக்களை பாகிஸ்தான் அணியினர் பார்த்து வருகிறார்கள். கோலி எப்படி பயிற்சி செய்கிறார் என்று அதை பாரத்து அவரை பின் தொடர்கிறார்கள். அதேபோல் கோலி விளையாடும் வீடியோக்களையும் மொத்தமாக வைத்து பாகிஸ்தான் வீரர்கள் பார்த்து வருகிறார்கள்.

ஆம்
இதை பாகிஸ்தான் அணியின் மூத்த பேட்ஸ்மேன் பாபர் ஆஸம் ஒப்புக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர், நாங்கள் கோலி எப்படி விளையாடுகிறார் என்று ஆய்வு செய்து வருகிறோம். அதை வைத்து அவரை பின்பற்றுவோம். அவரை விக்கெட் எடுக்கவும் இந்த வீடியோ எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications