கடைசியில் இலங்கை போட்டியிலும் அது நடந்து விட்டது.. தலையை பிய்த்துக் கொண்ட நியூசி வீரர்கள்.. வீடியோ!

World cup 2019 NZ VS SL | Boult bowled karunaratne | நியூசி-இலங்கை ஆட்டத்தில் நடந்த ஸ்வாரஸ்யம்

லண்டன்: இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியில் மிக வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது.

நேற்று மாலை நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தற்போது இலக்கை அணிதான் உலகக் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொஞ்சம் கூட வலுவே இல்லாத அணியாக இருக்கிறது.

அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வலுவான வீரர்கள் என்று யாரும் இல்லை. அதேபோல் போட்டியை மாற்ற கூடிய வீரர்கள் என்று யாரும் கிடையாது.

போர் பூமியின் ஹீரோ.. 20 வயதில் ஆஸ்திரேலிய பவுலர்களை பறக்கவிட்ட ரஷீத் கான்.. சோக வரலாறு!

 நேற்று நடந்தது

நேற்று நடந்தது

இந்த நிலையில் நேற்று நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணிதான் முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி பேட்டிங் இறங்கி வலுவான ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கலாம் என்று நினைத்தது.

 ஆனால் என்ன நடந்தது

ஆனால் என்ன நடந்தது

ஆனால் இலங்கை அணி நினைத்தது போல நடக்கவில்லை. லஹிரு திருமன்னே வந்த வேகத்தில் 4 ரன்களில் அவுட்டானார். அதன்பின் திமுத் கருணாரத்னே மட்டும் 52 ரன்கள் எடுத்தார். குசல் பெரேரா 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் எல்லோரும் வரிசையாக சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

 என்ன ஸ்கோர்

என்ன ஸ்கோர்

இதனால் 29.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இலங்கை அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிக எளிதான ஸ்கோர் என்பதால் நியூசிலாந்து அணி மிகவும் தன்னம்பிக்கையாக இறங்கி விளையாடியது. அந்த அணி, 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி எளிதாக 137 ரன்களை எடுத்தது.

 சூப்பர் சம்பவம்

சூப்பர் சம்பவம்

இந்த போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்த போதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. குசல் பெரேரா அப்போது ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது நியூசிலாந்து வீரர் போட்ட பந்து சரியாக ஆப் ஸ்டம்பை பதம் பார்த்தது. வேகமாக வந்த பந்து ஸ்விங் ஆகி ஆப் ஸ்டம்ப் மீது பட்டது.

ஆனால் இல்லை

ஆனால் நியூசிலாந்து வீரர்கள் எதிர்பார்த்தது போல விக்கெட் விழவில்லை. பந்து ஸ்டம்பில் பட்டும் கூட , பெயில்ஸ் கீழே விழவில்லை. இதனால் அம்பயர் விக்கெட் கொடுக்கவில்லை. அதேபோல் ஸ்டம்பில் லைட்டும் எரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏன் அதிர்ச்சி

ஏன் அதிர்ச்சி

ஆனாலும் இந்த சம்பவம் நியூசிலாந்து வீரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தொடரில் அடிக்கடி இப்படி நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பெயில்ஸ்களுக்கு எதிராக நிறைய பேர் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். பெயில்ஸ் எளிதாக கீழே விழும் வகையில் அதை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
ICC World Cup 2019: Kusal Perera had a massive slice of luck in the match against New Zealand.
Story first published: Sunday, June 2, 2019, 10:19 [IST]
Other articles published on Jun 2, 2019
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more