Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 4 ஓவர்கள்.. போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்த பவுலர்கள்.. இந்திய அணிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

Recommended Video

World Cup 2019 : Ind Vs Nz : அந்த 4 ஓவர்கள்..போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்த பவுலர்கள்- வீடியோ

லண்டன்: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெறும் 239 ரன்களுக்கு சுருண்டு இருக்கிறது. இதற்கு இந்திய அணியின் திறமையான பவுலிங்கும் முக்கிய காரணமாகும். இந்திய அணிக்கு இதனால் அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது செமி பைனல் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியின் தொடர்ச்சியாக இன்று போட்டி நடந்து வருகிறது.

தற்போது மான்செஸ்டர் மைதானத்தில் நல்ல வானிலை நிலவி வருகிறது. அங்கு வெயில் அடிப்பதால் இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

செம ஓவர்

செம ஓவர்

இந்த போட்டி முழுக்க இந்த அணியின் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதிலும் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் மிகவும் அதிரடியாக பந்து வீசினார்கள். இவர்கள் ஜோடி நேற்றே முதல் பத்து ஓவர்களில் வெறும் 27 ரன்களை கொடுத்து 1 விக்கெட் எடுத்து இருந்தனர்.

இன்றும் தொடர்ந்தது

இன்றும் தொடர்ந்தது

ஆனால் இன்று போட்டி தொடங்கிய போதே பிட்ச் பெரிய அளவில் மாறியது தெரிந்தது. இன்றைய போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. பும்ரா, புவனேஷ்வர் குமார் பந்துகளை கூட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் எளிதாக அடிக்க முடிந்தது. ஆனாலும் பும்ரா, புவி இருவரும் ரன்களை கட்டுப்படுத்தினார்கள்.

செம நான்கு ஓவர்கள்

செம நான்கு ஓவர்கள்

அதிலும் இன்று கடைசியாக போடப்பட்ட நான்கு ஓவர்களில் இந்திய பவுலர்கள் மொத்தமாக போட்டியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிலும் ஜடேஜா எடுத்த ரன் அவுட், புவனேஷ்வர் குமார் பந்தில் லதாம் அடித்த பந்தை ஜடேஜா பிடித்தது இரண்டும் பெரிய திருப்பமாக அமைந்தது.

வாவ் எப்படி

வாவ் எப்படி

கடைசி நேரத்தில் நியூசிலாந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணிக்கு சாதகமாக முடிந்து இருக்கிறது. கடைசி 4 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரிதான் சென்றது. அதோடு கடைசி 4 ஓவர்களில் மொத்தம் 28 ரன்கள் சென்றது குறிப்பிடத்தக்கது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

இதனால் இந்திய அணிக்கு மிக குறைவான 240 இலக்கே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை மழை வந்து டிஎல்எஸ் முறை கொண்டு வரப்பட்டாலும் இந்திய அணிக்கு குறைவான ரன்கள் இலக்கே நிர்ணயம் செய்யப்படும். ஆகவே இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றியை நோக்கி நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 10, 2019, 15:29 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+