Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் - டிரிக் சிக்ஸ்.. யார் பாஸ் இவரு? அசத்தல் வீடியோ!

Recommended Video

WORLD CUP 2019 BAN VS WI | மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

லண்டன்: வங்கதேச வீரர் லிடோன் டாஸ் தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே ஹாட் டிரிக் சிக்ஸ் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணி அதிரடியாக வெற்றிபெற்று இருக்கிறது. வங்கதேசம் வீரர்கள் இந்த போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடினார்கள்.

இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 321 ரன்கள் எடுத்தது. ஆனால் வங்கதேசம் அணி எளிதாக இந்த போட்டியில் வென்றது. வெறும் 41.3 ஓவர்களில் வங்கதேசம் 322 ரன்களை எடுத்து வென்றது.

 அதிக ஸ்கோர்

அதிக ஸ்கோர்

நேற்று வெறும் 99 பந்துகளில் ஹசன் 124 ரன்கள் எடுத்தார். இதில் 16 பவுண்டரி அடக்கம். அதேபோல் லிடோன் டாஸ் 69 பந்தில் 94 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரி 4 சிக்ஸர் அடக்கம். வங்கதேசம் அணி நேற்று 6 சிக்ஸர் மட்டுமே அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 யார் இவர்

யார் இவர்

இதுதான் லிடோன் டாஸுக்கு முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆம் இவரை அணியில் இத்தனை நாட்கள் எடுக்காமலே வைத்திருந்தனர். நேற்று வங்கதேசம் அணியில் முகமது மிதுன் மாற்றப்பட்டு இவர் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதை சரியாக பயன்படுத்தி இவர் சாதனை படைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 எப்படி சூப்பர்

எப்படி சூப்பர்

நேற்று இவர் 37 வது ஓவரில் நிகழ்த்திய சாதனைதான் தற்போது பெரிய வைரலாகி உள்ளது. அந்த ஓவரை மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் கேப்ரியல் வீசினார். அதுவரை லிடோன் தாஸ் 53 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்தே சிக்ஸ் அடித்தார். அதற்கு அடுத்த பந்தும் சிக்ஸ் அடித்தார். பின் மூன்றாவது பந்தும் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

செம சாதனை

இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க ஹிட் அடித்துள்ளது. இதன் மூலம் முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே ஹாட் டிரிக் சிக்ஸ் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் இவர் தற்போது தன்னுடைய இடத்தையும் அணியில் உறுதி செய்துள்ளார். இதனால் அணியில் மிதுன் இனி இடம்பிடிப்பது கஷ்டம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, June 18, 2019, 13:06 [IST]
Other articles published on Jun 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+