சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்!
Recommended Video

லண்டன்: இந்திய அணி மேற்கு இந்தியா தீவுகளுக்கு எதிரான போட்டிக்காக நேற்று உள் அரங்கில் பயிற்சி செய்த போது முக்கியமான வீரர் ஒருவர் நேற்று மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். நேற்று இந்திய வீரர்கள் கிட்டத்தட்ட 6 மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கி நடந்து வருகிறது. இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடரில் மிகவும் வலுவான அணிகளாக இருக்கிறது. வரிசையாக இரண்டு அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வென்று வருகிறது.
இந்த நிலையில் நாளை இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி தனது வெற்றியை தொடர்ந்து பதிவு செய்ய இதில் தீவிரமாக இருக்கிறது.

காயம்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது 4 வது ஓவர் போடும் போதே இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் காயம் அடைந்தார். வழுக்கியதில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு இரண்டு முதல் மூன்று போட்டிகளில் ஓய்வு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி களமிறங்கி உள்ளார்.

சிறப்பாக ஆடுகிறார்
ஷமி தற்போது இந்திய அணியில் மிகவும் சிறப்பாகவே ஆடி வருகிறார். கடந்த போட்டியிலும் கூட அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஹாட் ட்ரிக் எடுத்தார். இந்த நிலையில் இந்திய அணி தற்போது கூடுதல் பலம் பெற்று இருக்கிறது. ஆம், இந்திய அணியின் பயிற்சியில் மீண்டும் புவனேஷ்வர் குமார் ஈடுப்பட்டுள்ளார்.
நேற்று பயிற்சி
நேற்று இந்திய அணி உள்அரங்கில் வலைப்பயிற்சி மேற்கொண்ட போது புவனேஷ்வர் குமார் அவர்களுடன் சேர்ந்து பவுலிங் செய்தார். அவருக்கு காலில் இருந்த சதை பிடிப்பு முழுவதுமாக குணமடைந்து உள்ளது. நல்ல சிகிச்சை காரணமாக அவர் வேகமாக குணமடைந்து இருக்கிறார். இதனால் அவர் மீண்டும் பயிற்சிக்கு வந்தார்.

ஆனால் சந்தேகம்
ஆனால் இவர் நாளைய போட்டியில் களமிறங்குவது சந்தேகம்தான் என்கிறார்கள். நாளை எப்படியும் இந்திய அணியில் ஷமிதான் விளையாடுவார். அதற்கு அடுத்த போட்டிகளில் இருந்தே மீண்டும் புவனேஷ்வர்குமார் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்படுவார். தற்போது புவனேஷ்வர்குமார் பயிற்சி செய்வதே பெரிய விஷயம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications