Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதானே பிரச்சனை.. சட்டை இல்லாத மலிங்காவின் அந்த ஒரு புகைப்படம்.. ஜெயவர்த்தனே செய்த வைரல் போஸ்ட்!

Recommended Video

Lasith Malinga : சட்டை இல்லாத மலிங்காவின் புகைப்படம்.. ஜெயவர்த்தனே செய்த வைரல் போஸ்ட்!- வீடியோ

லண்டன்: இலங்கை வீரர் மலிங்காவின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அதுகுறித்து நெகிழ்ச்சிகரமான கமெண்ட் ஒன்றை இலங்கை முன்னாள் வீரர் மகிலா ஜெயவர்தனே போஸ்ட் செய்து இருக்கிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் அதிரடியாக நடந்து வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி நேற்று யாரும் எதிர்பார்க்காத சூப்பர் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.

எல்லோரும் இலங்கை தோற்றுவிடும் என்று நினைத்த நேரத்தில் இங்கிலாந்துக்கு யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியை அளித்துள்ளது இலங்கை. இலங்கையின் வெற்றிக்கு அந்த அணியின் பவுலிங் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வெற்றி

இலங்கை வெற்றி

நேற்று முதலில் களமிறங்கிய இலங்கை 50 ஓவரில் வெறும் 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. முக்கியமாக இலங்கையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக ஆடினார்கள். ஆனாலும் 239 ரன்கள் எடுத்த இலங்கை எளிதாக 219 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டி சாதனை செய்து இருக்கிறது. இலங்கையின் வெற்றிக்கு அந்நாட்டு பவுலர் மலிங்கா மிக முக்கிய காரணம்.

மலிங்கா பவுலிங்

மலிங்கா பவுலிங்

நேற்று 10 ஓவர் போட்ட மலிங்கா 4 விக்கெட் எடுத்தார். அவரின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்தின் வலிமையான ஜானி பிரைஸ்டாவை டக் அவுட் செய்து வீட்டிற்கு அனுப்பினார். பின் 6 வது ஓவரில் இங்கிலாந்தின் இன்னொரு தொடக்க வீரர் வின்சும் மலிங்கா பந்தில் அவுட்டாகி வெளியே போனார். 30வது ஓவரின் மூன்றாவது பந்தில் நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் அவுட்டானார். மலிங்கா அதன்பின் இங்கிலாந்தின் கடைசி ஆயுதமான ஜோஸ் பட்லரையும் 32.3 ஓவரிலேயே காலி செய்தார்.

புகைப்படம்

இந்த நிலையில் மலிங்காவின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அதுகுறித்து நெகிழ்ச்சிகரமான கமெண்ட் ஒன்றை இலங்கை முன்னாள் வீரர் மகிலா ஜெயவர்தனே போஸ்ட் செய்து இருக்கிறார். மலிங்கா சட்டை இல்லாமல் தொப்பை தெரிய நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, சிறப்பாக விளையாடினீர்கள் மலி.. கடந்த சில நாட்களாக எல்லோரும் விவாதித்த இந்த புகைப்படத்தை ரசிகர்களுக்காக வெளியிடுகிறேன் என்று அவர் தொப்பையோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

தொப்பை வைரல்

தொப்பை வைரல்

நேற்று போட்டிக்கு முன்பாக மலிங்காவின் தொப்பையை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள். malinga belly என்ற டிவிட்டரில் டிரெண்ட் கூட செய்தார். அவர் தொப்பையோடு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியேறி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாகத்தான் அதே புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயவர்த்தனே மலிங்காவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, June 22, 2019, 13:34 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+