அன்று நடந்த சிறிய தவறு.. அவர் போனார் எல்லாம் போனது.. கேப்டன் கோலியை அசைத்து பார்த்த அந்த நொடி!
Recommended Video
லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் விலகியது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்லும் அரிய வாய்ப்பை இந்திய அணி இழந்து இருக்கிறது. மிக நல்ல அணியை லண்டன் கொண்டு சென்றும் கூட இந்திய அணியால் இந்த முறை கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்திய அணியின் தோல்விக்கு நிறைய காரணங்கள் பட்டியலிடப்படுகிறது. கோலியை அசைத்து பார்த்த நிமிடம் ஒன்று இந்த உலகக் கோப்பையில் நிகழ்ந்தது. அதுவும் கூட இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணம் ஆகும்.

கோலி
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக உருவெடுத்து இருந்தார் தவான். உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி வந்தார். அப்போது ஆஸ்திரேலியா வீரர் வீசிய பவுன்சர் சரியாக தவானின் இடது கையில் உள்ள கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு வீக்கம் வடியாமல் இருந்ததால் ஸ்கேன் செய்தனர்.

சோதனை
அவரை மருத்துவர்கள் தொடர்ந்து சோதனை செய்து வந்தனர். அவரை உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று அறிவுறுத்தினார்கள். காயம் சரியாகாத காரணத்தால் தவான் உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகினார். அவருக்கு பதிலாக தற்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பிடித்தார்.

கோலி ஏன்
இதுதான் கோலியை அசைத்து பார்த்த அந்த நிமிடம் என்று கூட கூறலாம். தவான் அணியில் இருந்து எப்போது சென்றாரோ அப்போதுதான் இந்திய அணிக்குள் சிக்கல் ஏற்பட்டது. அவர் சென்ற பின் தொடக்க வீரராக யார் ஆடுவது என்ற பிரச்சனை எழுந்தது. அதேபோல் மிடில் ஆர்டரில் யார் இறங்குவது என்ற கேள்வி எழுந்தது.

பெரிய சிக்கல்
இந்த பிரச்சனை தொடர் முழுக்க இருந்தது. தொடக்க வீரர்களை நம்பித்தான் இத்தனை ஆண்டுகள் இந்திய அணி இருந்து வந்தது. ஆனால் அவர்களில் ஒருவரே போன பின் என்ன செய்வது என்று தெரியாமல் மிடில் ஆர்டர் கஷ்டப்பட தொடங்கியது. முக்கியமாக மிடில் ஆர்டரில் இளம் வீரர்கள் அணிக்குள் எடுக்கப்பட்டது அணிக்கு பெரிய சிக்கலாக மாறியது.

மிக மோசமான நிலை
பண்ட், கே எல் ராகுல் போன்ற அனுபவம் இல்லாத வீரர்கள் அணிக்குள் எடுக்கப்பட்டு அவர்களை நம்பியே களத்தில் இறங்கியது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. தவான் சென்ற பின் மொத்த அழுத்தமும் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் மீது விழுந்தது. அவர்கள் இருவரும் அவுட்டானால் இந்திய அணியே கிடையாது என்ற நிலை ஏற்பட்டது.

காரணம் என்ன
ஒருவேளை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் தவான் விளையாடி இருந்தால் கண்டிப்பாக குறைந்தது இரட்டை இலக்க ரன்களாவது எடுத்து இருப்பார். கே எல் ராகுல் பொறுப்பில்லாத ஷாட்களை ஆடி வெறும் 1 ரன்களில் அவுட்டானது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.


Click it and Unblock the Notifications