Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியாக பந்து போடும் போது வெள்ளை உடையில் ஓடி வந்த மர்ம நபர்.. கோலி பிடித்த முதல் பாலே பரபரப்பு!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கேப்டன் கோலி பிடித்த முதல் பந்தே சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தற்போது நடந்து வருகிறது. அரங்கம் முழுக்க ரசிகர்கள் சூழ, அதிரிபுதியாக வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது.

செம அதிரடி

செம அதிரடி

அதன்பின் ரோஹித் சர்மா தனது அதிரடியை தொடங்கினார். விறுவிறுப்பாக ஆட தொடங்கிய ரோஹித் வந்த பந்துகளை எல்லாம் காட்டு காட்டு என்று காட்டினார். வெறும் 35 பந்துகளில் அரைசதம் அடைத்தார். அதன்பின் அதிரடியாக 90 ரன்களை கடந்து சிக்ஸ் பவுண்டரி என்று ஆடி வருகிறார்.

கே எல் ராகுல்

கே எல் ராகுல்

இன்னொரு பக்கம் கே எல் ராகுல் பொறுமையாக ஆடினார். அவர் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். இதில் 2 சிக்ஸர் அடக்கம். அதேபோல் 3 பவுண்டரி அடக்கம். அதன்பின் ராகுல் ரியாஸ் பந்தில், பாபர் ஆஸமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கோலி

கோலி

அதன்பின்தான் இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்கினார். கோலி இறங்கிய ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் போட்டார். அப்போது அந்த பந்தை கோலி தொடாமல் அப்படியே நின்றார். அதோடு கோபமாக நடுவரை நோக்கி கோலி கை காட்டினார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அந்த பந்து சரியாக போடும் போது எதிரே இருக்கும் கருப்பு திரைக்கு முன் வெள்ளை நிற உடை அணிந்து ஒருவர் ஓடினார். சரியாக பந்து போடும் போது கோலிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அவர் திரைக்கு முன் நின்றார். இந்த கருப்பு திரை வீரர்களுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதற்காக வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

யார்

யார்

இந்த இடத்தில் ரசிகர்கள், வேறு நபர்கள் நிற்க கூடாது என்பது விதி. இதையடுத்து அந்த வெள்ளை உடை அணிந்து இருந்த நபரை பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர். அவர்கள் அந்த நபரிடம்ம் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள் .

Story first published: Sunday, June 16, 2019, 17:09 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+