For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு புதிய சிக்கல்.. கடைசி நேரத்தில் நியூஸி. பக்கம் வீசும் காற்று.. என்ன நடக்க போகிறது?

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் மழை பெய்தால், இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ : SEMI FINAL | அரையிறுதியில் இந்தியாவின் வெற்றி மழையின் கைகளில்.!- வீடியோ

லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் மழை பெய்தால், இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மான்செஸ்டர் பிட்ச் இந்திய அணிக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருக்கிறது. இந்த பிட்சின் வரலாறும் இந்தியாவிற்கு எதிராகவே இருக்கிறது.

நேற்று நியூசிலாந்து 46.1 ஓவர்கள் பிடித்து 5 விக்கெட்டை இழந்து வெறும் 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் நேற்று போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று மாலை மீண்டும் மீதமுள்ள போட்டி நடக்கும். நேற்று நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து இன்று போட்டி நடக்கும்.

மழை பெய்தால்

மழை பெய்தால்

இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஆனால் போட்டி முழுக்க மழை பெய்யாது. போட்டி தொடங்கும் முன் சில மணி நேரம் மழை பெய்யும். அதன்பின் போட்டிக்கு பாதியில், இந்திய நேரப்படி 7 மணிக்கு மேல் அங்கு மழை பெய்யலாம் என்கிறார்கள்.

பிட்ச் மாறும்

பிட்ச் மாறும்

ஒருவேளை மான்செஸ்டரில் இன்று மழை பெய்தால், அதனால் பிட்ச் பெரிய அளவில் பாதிக்கப்படும். மழை பெய்யாமல் இருந்தால் பேட்டிங் செய்ய பிட்ச் சாதகமாக இருக்கும். ஆனால் மழை வந்தால் கண்டிப்பாக நியூசிலாந்து பவுலர்களுக்கு பிட்ச் ஏதுவானதாக மாறும். இங்குதான் இந்தியாவிற்கு முதல் சிக்கல் காத்து இருக்கிறது.

இரண்டாவது சிக்கல்

இரண்டாவது சிக்கல்

போட்டிக்கு இடையில் மழை விட்டு விட்டு வந்து, போட்டி தாமதமாக தொடங்கினால் அது இன்னும் பிரச்சனையாகும். போட்டி தாமதமாக தொடங்கினால் டிஎல்எஸ் முறை பின்பற்றப்படும். அப்படி நடந்தாலும் கூட இந்திய அணிக்குத்தான் சிக்கல். ஏனென்றால் டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டால் ஒரு ஓவருக்கு இந்திய அணி 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

7 ரன்கள் முடியாது

7 ரன்கள் முடியாது

ஆனால் மான்செஸ்டர் மைதானத்தில் ஓவருக்கு 7 ரன்கள் அடிப்பது என்பது சிரமமான காரியம் . முக்கியமாக நியூசிலாந்து அணி கூட 45 ஓவர்களில் 4 ரன் ரேட் மட்டுமே வைத்து இருந்தது. இந்த மழை காரணமாக இன்னும் மோசமாக பிட்ச் மாறும். அப்படி நடந்தால் இந்திய ஓவருக்கு 6 ரன்கள் அடிப்பதே கஷ்டமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

அதேபோல் இந்த மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் சேசிங் செய்யும் அணி 95% தோல்வியை தழுவி இருக்கிறது. முக்கியமாக சேசிங் செய்யும் அணி எப்போதும் 6 ரன்ரேட்டை கடந்தது இல்லை. இங்கு இரண்டாவது பேட்டிங் இறங்கும் அணி பெரும்பாலும் 250 ரன்களை எடுப்பதே பெரிய சிரமமான காரியம்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இங்குதான் நியூசிலாந்தை சேசிங் செய்ய முடியாமல் மேற்கு இந்திய தீவுகள் தோல்வி அடைந்தது. அதேபோல் இங்குதான் பாகிஸ்தான் இந்தியாவிடம் சேசிங் செய்யும் போது தோல்வி அடைந்தது. அன்றும் மழை பெய்தது. இதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக திரும்ப பெரிய வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, July 10, 2019, 13:01 [IST]
Other articles published on Jul 10, 2019
English summary
ICC World Cup 2019: Manchester pitch may play a big role in Ind vs NZ match today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+