இந்திய அணிக்கு கிடைத்த நல்ல செய்தி.. பேட்ஸ்மேன்கள் மகிழ்ச்சி.. கலக்கத்தில் நியூசிலாந்து டீம்!
Recommended Video
லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடக்கும் மான்செஸ்டர் மைதானத்தில் நல்ல வானிலை நிலவி வருகிறது. அங்கு பெரும்பாலும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை மைய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் போட்டியின் இரண்டாம் பாகம் இன்று நடக்க உள்ளது. ஆம் முதல் பாகம் நேற்று நடைபெற்றது. ஆனால் போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
நேற்று நியூசிலாந்து 46.1 ஓவர்கள் பிடித்து 5 விக்கெட்டை இழந்து வெறும் 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

வெயில்
இந்த நிலையில் மான்செஸ்டரில் அதிகாலையில் இருந்து வெயில் அடித்து வருகிறது. பெரிய அளவில் வானத்தில் மேகமே காணப்படவில்லை. அதேபோல் பெரிய அளவில் வெயிலும் சுட்டெரிக்கவில்லை. மிதமான, ஈரப்பதமான வானிலையே அங்கு நிலவி வருகிறது.

மைதானம்
இதனால் நேற்று தண்ணீருடன் காணப்பட்ட மைதானம் இன்று நன்றாக உலர்ந்து உள்ளது. ஓல்ட் டிரபோர்ட் மைதானம் விரைவாக தண்ணீரை வெளியேற்றும் வசதியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று அதிகாலையே ஓல்ட் டிரபோர்ட் மைதானம் நன்றாக உலர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும்.

எப்போது பெய்யும்
இன்று போட்டி துவங்கும் முன் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆனால் இந்திய நேரப்படி 7 மணிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 7 மணிக்கு பிறகு அங்கு மழை பெய்ய 40% வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஆனால் பெரும்பாலும் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும்தான் இன்று நடக்கும், என்பதால் பெரும்பாலும் 7 மணிக்கே போட்டி முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி நேரம்
அதே சமயம் கடைசி நேரத்தில் இந்திய அணியின் பேட்டிங் மழை காரணமாக பாதிக்கப்படலாம். ஆனால் அந்த மழையும் நீண்ட நேரம் பெய்ய வாய்ப்பில்லை என்றே வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications