ஏன் இப்படி பாகுபாடு காட்டுகிறீர்கள்.. ஏமாற்றத்தில் முக்கிய வீரர்கள்.. சர்ச்சையில் இந்திய அணி!
Recommended Video
லண்டன்: இந்திய அணியில் நல்ல திறமையான அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கும் நேரத்தில் மயங்க் அகர்வாலை அணிக்குள் எடுப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக தற்போது இங்கிலாந்தில் இருக்கும் அணியிலேயே நல்ல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்குள் அடுத்தடுத்து நடந்து வரும் மாற்றங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமான வீரர்களுக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.
அதிலும் தொடர்பே இல்லாமல் இளம் வீரர்கள் அணியில் எடுக்கப்படுகிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியின் அனுபவம் மிகுந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

என்ன மாற்றம்
இந்த பிரச்சனை முதலில் இந்திய அணியில் விஜய் சங்கர் எடுக்கப்பட்ட போதே எழுந்தது. தினேஷ் கார்த்திக் இருக்கும் போது எதற்கு விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள். தினேஷ் கார்த்திக்தான் நல்ல ஹிட் பேட்ஸ்மேன். ஆனால் அவருக்கு பதில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடும் விஜய் சங்கருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அடுத்து என்ன
அதற்கு அடுத்து ரிஷப் பண்ட் அணிக்குள் வந்த போதும் இதே பிரச்சனை எழுந்தது. தினேஷ் கார்த்திக் போல மூத்த வீரர்கள் இருக்கும் போது, டெல்லியில் இருந்து பண்டை ஏன் கொண்டு வருகிறார்கள். அணியில் இருக்கும் வீரர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படாத போது 21 வயது பண்ட் எதற்கு என்று கேள்வி எழுந்தது. ஆனால் பண்டிற்கு மக்கள் ஆதரவு பெரிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிது
இந்த நிலையில் தற்போது விஜய் சங்கர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார். விஜய் சங்கர் இப்படி விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டு இருக்கிறார். இதுவும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. தினேஷ் கார்த்திக் அணியில் இருக்கிறார். ரஹானே லண்டனில்தான் கவுண்டி விளையாடிக் கொண்டு இருக்கிறார். ராயுடு அணியில் சேர காத்துக் கொண்டு உள்ளார்.

ஆனால் என்ன
ஆனாலும் இவ்வளவு பேர் இருக்கும் போது, ஏன் ஒரு ஒருநாள் போட்டி கூட சர்வதேச அளவில் விளையாடாத மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கிறீர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் தினேஷ் கார்த்திக், ரஹானே , அம்பதி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் கடும் அதிர்ச்சியிலும், விரக்தியிலும் இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications