Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து சர்ச்சை.. ஒரே ஓவரில் 2 முறை நடுவரிடம் வார்னிங் வாங்கிய அமீர்.. என்ன நடந்தது!

Recommended Video

WORLD CUP IND VS PAK | இந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது!

லண்டன்: பாகிஸ்தான் பவுலர் அமிர் இரண்டு முறை இன்று சர்ச்சையில் சிக்கி நடுவரிடம் வார்னிங் வாங்கிய சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இன்று மிக முக்கியமான நாள். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பாகிஸ்தான் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

இரண்டு அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டி இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக 6 தொடர் தோல்விக்கு பிறகு இன்று வெற்றியை பதிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

டாஸ்

டாஸ்

இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடி வருகிறது. பவுலிங் பிட்சாக இருந்தாலும் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது.

எப்படி பிரச்சனை

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். அவர் போட்ட முதல் ஓவர் மெய்டன் ஓவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவரில் கே எல் ராகுல் பெரிய அளவில் திணறினார். அதற்கு அடுத்த ஓவரும் அமீர் இதே போல் அதிரடியாக வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சர்ச்சை

ஆனால் இந்த ஓவரில் அமீர் மைதானத்தில் பிட்சின் மீது ஓடினார். பிட்ச் நடுப்பகுதியில் வீரர்கள் இப்படி ஓடுவது விதிமுறை மீறல் ஆகும். ஆனால் அதை மீறி அமீர் பிட்ச் மீது ஓடினார். இதையடுத்து நடுவர் அவருக்கு வார்னிங் கொடுத்தார்.

மீண்டும் செய்தார்

மீண்டும் செய்தார்

இதையடுத்து அடுத்த பந்திலும் அமீர் அதேபோல செய்தார். அடுத்த பந்திலும் அமீர் பிட்ச்சிற்குள் சென்றார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடுவர் அமீருக்கு மீண்டும் வார்னிங் கொடுத்தார். இந்த சம்பவம் இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் இடையே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Sunday, June 16, 2019, 16:19 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+