For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் பாஸ் இவரு.. இப்படி ஆடுறார்.. ஆஸ்திரேலியாவை கலங்க வைத்த ஒரு வீரர்.. ஆப்கானின் புதிய நம்பிக்கை!

Recommended Video

World cup 2019 AUS VS AFG | ஆஸ்திரேலியாவின் பௌலிங்கை சமாளித்து ஆப்கானிஸ்தான் போராட்டம்!

லண்டன்: நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் ஆடிய விளையாட்டு பெரிய கவனம் பெற்றுள்ளது.

நேற்று ஆஸ்திரேலியாவிற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடந்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தானில் ரஹ்மத் ஷா, ரஷீத் கான், நஜிபுல்லா, குல்பதீன் ஆகியோர் மிக சிறப்பாக ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த அணி எளிதாக 207 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா எப்படி

ஆஸ்திரேலியா எப்படி

அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா 34.5 ஓவரில் 3 விக்கெட்டிற்கு 209 ரன்கள் எடுத்து வென்றது. ஆப்கானிஸ்தான் அணி நன்றாக விளையாடினாலும் பெரிதாக அந்த அணியால் ஆஸ்திரேலியா பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் எப்படி

ஆப்கானிஸ்தான் எப்படி

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே வரிசையாக அவுட்டாகிக் கொண்டே வந்தனர். முகமது ஷாஷாத் மற்றும் சாசாய் ஆகிய இரண்டு தொடக்க வீரர்களும் டக் அவுட்டானார்கள். அதன்பின் வந்த ரஹ்மத் ஷா மற்றும் ஷாஹிதி இருவர் மட்டும் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

எப்படி ஆடினார்கள்

எப்படி ஆடினார்கள்

அதில் ரஹ்மத் ஷா 43 ரன்கள் அடித்தார். அதன்பின் ஷாஹிதி 18 ரன்கள் அடித்தார். இருவரும் அவுட்டான பின் முகமது நபி 7 ரன்களுக்கு அவுட்டானார். அதேபோல் குல்பதீன் 31 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின்தான் நஜிபுல்லா சத்ரான் களமிறங்கினார். இவரை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று ஆஸ்திரேலியா அணி கனவு கண்டது. ஆனால் நடந்தது வேறு.

தோனி போல

தோனி போல

களமிறங்கி முதலில் தோனி ஸ்டைலில் பொறுமையாக ஆடிய நஜிபுல்லா அதன்பின் அதிரடி காட்ட தொடங்கினார். முக்கியமாக ஆஸ்திரேலியாவின் ஸ்பின் பவுலர்களை பறக்கவிட்டார். கோலி எப்போதும் திணறும் சாம்பாவின் பந்துகளை எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்.

நஜிபுல்லா ஏன்

நஜிபுல்லா ஏன்

மொத்தம் 49 பந்துகள் பிடித்த அவர் 57 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடக்கம். மிகவும் விறுவிறுப்பாக இதனால் ஆட்டம் சென்றது. இவருடன் ரஷீத் கான் வேறு சேர்ந்து கொண்டதால், ஆட்டம் இன்னும் முக்கியத்துவம் பெற்றது. 51 ரன்கள் இருக்கும் போது நஜிபுல்லா கேட்ச் கொடுத்து ஸ்டோனிஸ் பந்தில் அவுட்டானார்.

கெத்து நஜிபுல்லா

கெத்து நஜிபுல்லா

ஆப்கானிஸ்தான் என்றால் ஷாஷாத், ரஷித் கான் என்று மட்டும்தான் இருந்தது. தற்போது நஜிபுல்லா அந்த இடத்தை பெற்று இருக்கிறார். ஆஸ்திரேலியா வீரர்களையே வீழ்த்தியதன் மூலம், நஜிபுல்லா ஆப்கானிஸ்தான் அணியின் புதிய நம்பிக்கையாக மாறியுள்ளார்.

Story first published: Sunday, June 2, 2019, 13:45 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
ICC World Cup 2019: Najibullah Zadran becomes a next big thing for the Afghanistan team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+