Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவான் முதல் கோலி வரை.. அதுவே எல்லா பிரச்சனைக்கும் காரணம்.. நீக்குங்கள்.. இந்திய அணியில் போர்க்கொடி

Recommended Video

நைல் ஓவரில் நடந்தது என்ன? தவானுக்கு காயம் ஏற்பட்டது எப்படி

லண்டன்: இந்திய அணியில் வீரர்கள் காயம் அடைவதற்கும், சில வீரர்கள் அணியில் இடம்பெற முடியாமல் போவதற்கும் பின் நிறைய காரணங்கள் இருப்பதாக செய்திகள் வருகிறது. இதனால் இந்திய அணியில் தேர்வு செய்ய பயன்படுத்தும் முறையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணியில் தவான் தற்போது காயத்தோடு இருக்கிறார். உடல் தகுதியை நிரூபித்துவிட்டு வந்த சில வீரர்கள் இன்னும் சரியாக விளையாட தொடங்கவில்லை.

சில வீரர்கள் உடல் தகுதியை நிரூபிக்காமலே நல்ல பார்மில் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் பல்வேறு காரணங்களால் அணியில் இடம்பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனைகளுக்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்ய பயன்படுத்தப்படும் யோ யோ டெஸ்ட் முறைதான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இந்த டெஸ்ட் முறையை தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டும் கடைபிடித்து வருகிறது. அவர்களும் இந்த டெஸ்ட் முறையை கைவிடும் எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இது

எப்படி இது

இந்திய அணியில் விளையாட யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறை வைக்கப்படுகிறது. இது மிகவும் கடினம். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். அப்போது வரிசையான இடைவெளியில் பீப் சத்தம் கேட்கும். ஒவ்வொரு பீப் சத்தம் கேட்கும் போது ஓடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இதில் வெற்றி பெற்று பிட்னஸை நிரூபிப்பது மிகவும் கடினம்.

முடியவில்லை

முடியவில்லை

இதில் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் பிட்னெஸை நிரூபிக்க முடியும். இதில் தற்போது மனிஷ் பாண்டேதான் அதிக மதிப்பெண்களை கொண்டு இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக கோலி அதிக மதிப்பெண் கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த டெஸ்ட் முறையில் நிறைய சிக்கலான விஷயங்கள் இருக்கிறது .

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

அதன்படி இந்த டெஸ்ட் காரணமாக உடல் தகுதியை நிரூபிக்கும் வீரர்கள் பார்மில் இருப்பது இல்லை. பார்மில் இருக்கும் வீரர்கள் இதில் வெற்றிபெறுவது இல்லை. இந்த டெஸ்டில் வெற்றிபெறுவதற்கு பார்மில் இருப்பதற்கும் தொடர்பில்லை. இதனால் இந்த டெஸ்டில் வெற்றிபெற்று அணிக்கு வரும் கே எல் ராகுல் போன்ற வீரர்கள் சரியாக விளையாடுவது கிடையாது. இதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது.

எப்படி பிரச்சனை

எப்படி பிரச்சனை

அதன்படி இந்த டெஸ்ட் மூலம் உடல் தகுதியை நிரூபித்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், கே எல் ராகுல், கேதார் ஜாதவ் யாரும் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. இதனால் இந்த டெஸ்ட் முறையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. வேறு ஏதாவது ஒரு முறைப்படி அணியில் வீரர்களை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

அதுதான் சரி

அதுதான் சரி

வீரர்களின் பார்மை சோதிக்கும் விதமாக டெஸ்டுகளை வடிவமைக்க வேண்டும். பார்மில் இல்லாத வீரர்கள் களத்தில் இறங்கி காயம் பட்டு அணிக்கு ஏமாற்றம் அளிப்பதற்கு நல்ல டெஸ்ட் முறையை வடிவமைக்கலாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Story first published: Wednesday, June 12, 2019, 11:23 [IST]
Other articles published on Jun 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+