Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்து செய்த ஒரு தவறு.. இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை.. எட்டிவிடும் தூரத்தில் வெற்றி!

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ | இந்தியா இறுதி போட்டிக்கு செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு- வீடியோ

லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று செமி பைனல் போட்டி நடைபெற்றது.

ஆனால் மழை காரணமாக இந்த போட்டி பாதியில் தடைபட்டது. இன்று இந்த போட்டியின் மீதம் உள்ள ஓவர்கள் வீசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பிட்ச்

என்ன பிட்ச்

இந்த போட்டியில் இருக்கும் சிக்கலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், இந்த போட்டி நடக்கும் மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஓல்ட் டிரபோர்ட் மைதானம் பவுலிங் செய்வதற்கு சாதகமான ஸ்லோ பிட்ச் ஆகும். இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிதான் எப்போதும் வெற்றிபெறும்.

பெரிய கஷ்டம்

பெரிய கஷ்டம்

இங்கு எப்போதும் சேசிங் செய்யும் அணியே அதிக முறை தோல்வியை தழுவி உள்ளது. இங்கு இரண்டாவது பேட்டிங் களமிறங்குவது என்பது நெருப்பில் கால் வைப்பதற்கு சமமானது. இதனால்தான் நேற்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் அதுவே நியூசிலாந்து அணிக்கு சிக்கலாகி உள்ளது.

எப்படி சிக்கல்

எப்படி சிக்கல்

நேற்று நடந்த போட்டி 46.1 ஓவரில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று நியூசிலாந்து மீதமுள்ள 4 ஓவர்கள் பிடித்த பின் இந்தியா உடனே களமிறங்கும். அதாவது இந்தியா இன்று 3.30 மணிக்கு மதியம் களமிறங்கும். இது ஒரு விதத்தில் இந்தியாவிற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

நியூசிலாந்து தவறு

நியூசிலாந்து தவறு

எப்படி என்றால், இன்று மழை இல்லை என்பதால், அங்கு ஓல்ட் டிரபோர்ட் மைதானம் மிகவும் காய்ந்து இருக்கிறது . இது இந்திய அணி பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். கிட்டத்தட்ட இந்தியா இன்று முதலில் களமிறங்குவதற்கு சாதகமான சூழ்நிலை இது. இதுதான் நியூசிலாந்து அணிக்கு பிரச்சனையாக முடிந்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தும் கூட போட்டி நியூசிலாந்து அணிக்கு சாதகமான நிலையில் இல்லை.

ஒரே ஒரு தவறு

ஒரே ஒரு தவறு

நியூசிலாந்து அணி நிர்வாகம் சரியாக வானிலையை கணித்து இருந்தால் கண்டிப்பாக நேற்று பேட்டிங் எடுத்து இருக்க மாட்டார்கள். ஒருவேளை நேற்று இந்தியா முதலில் பேட்டிங் செய்திருந்து, இன்று நியுசிலாந்து பேட்டிங் செய்து இருந்தால் போட்டி வேறு மாதிரி சென்றிருக்க கூட வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டுவிட்டது.

வாய்ப்பு

வாய்ப்பு

இப்போது நியூசிலாந்து செய்த தவறு இந்திய அணிக்கு உதவி காரணமாக மாறி உள்ளது. இந்தியா கிட்டதட்ட இந்த போட்டியில் இப்போதே வெற்றிக்கு பக்கம் வந்துவிட்டது. இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடினால் போதும், வெற்றி நம் வசம்தான்.

Story first published: Wednesday, July 10, 2019, 13:41 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+