Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டிக்கு முன்பே இந்திய அணிக்கு ஷாக் கொடுத்த நியூஸி. கேப்டன்.. கோலி, ரோஹித் என்ன செய்வார்களோ?

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான செமி பைனல் போட்டிக்கு முன்பே நியூசிலாந்து கேப்டன் ஷாக்கிங் செய்தி ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கிய வேகமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று செமி பைனல் போட்டி நடக்கிறது.

இன்று நடக்கும் செமி பைனல் போட்டியில் இந்திய அணி எப்படியாவது வெற்றிபெற்று பைனலுக்கு செல்ல ஆசைப்படும். இதனால் இந்திய வீரர்கள் கடும் வெறியோடு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் . இன்னொருவர் லோக்கி பெர்குசான். இவர்கள் இருவரும் இன்று இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இந்திய அணிக்கு போல்டை விட லோகி பெர்குசான்தான் பெரிய அச்சுறுத்தலாக இருக்க போகிறார் என்கிறார்கள். ஏனென்றால் இந்த உலகக் கோப்பை தொடரில், லோகிதான் அதிக டாட் பந்து மற்றும் விக்கெட்டுகளை எடுக்கும் வீரராக இருக்கிறார். அதிக விக்கெட் எடுக்கும் வீரர்கள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார்.

செம பவுலிங்

செம பவுலிங்

இவர் இதுவரை 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இவர் இப்போதே நிறைய திட்டங்களை வகுத்துள்ளார் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். முக்கியமாக தொடக்க வீரர்களை விக்கெட் எடுக்க லோகி நிறைய திட்டங்களை வகுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். இவர் இந்திய அணிக்கு மிகவும் சவாலான பவுலராக இருப்பார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

காயம் அடைந்தார்

காயம் அடைந்தார்

ஆனால் கடந்த இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இவர் விளையாடவில்லை. நியூசிலாந்து அணி அந்த போட்டியில் தோல்வி அடைவதற்கு இது முக்கிய காரணமாக இருந்தது. இவருக்கு காலில் ஏற்பட்டு இருந்த காயம் காரணமாக அந்த போட்டியில் விளையாடவில்லை. தற்போது இவர் காயம் முழுமையாக சரியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டிப்பாக

கண்டிப்பாக

இதனால் இன்று நடக்கும் போட்டியில் லோகி கண்டிப்பாக விளையாடுவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விஷயம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய பவுலர் ஸ்டார்க் மீது இந்தியா எப்படி எச்சரிக்கையாக இருந்ததோ, அதேபோல்தான் லோகி பந்து வீசுவார். அவரை சமாளிக்க இந்திய அணி புதிய திட்டம் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 9, 2019, 8:08 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+