Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போன முறையே பிரச்சனை வந்தது.. அனுமதிக்க முடியாது.. இந்திய ஆட்டத்தில் விதிக்கப்பட்ட முக்கிய தடை!

Recommended Video

World Cup 2019 : இந்திய ஆட்டத்தில் விதிக்கப்பட்ட முக்கிய தடை!- வீடியோ

லண்டன்: இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாதுகாப்பு கருதி நிறைய முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா நியூசிலாந்து போட்டி நடக்கும் மான்செஸ்டர் மைதானத்திற்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. 1 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 14 ஓவரில் 52 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இந்த நிலையில் இந்த போட்டியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையில் நடந்த லீக் போட்டியில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த போட்டியின் போது வானத்தில் இரண்டு விமானங்கள் பறந்தது. அதில் ஒரு விமானத்தில் பின் ''காஷ்மீருக்கு நீதி வேண்டும்'' என்று போஸ்டர் பறந்தது.

பெரிய பிரச்சனை

பெரிய பிரச்சனை

இன்னொரு விமானத்திற்கு பின் ''காஷ்மீருக்கு நீதி வேண்டும் - இனப்படுகொலையை நிறுத்து'' என்று போஸ்டர் பறந்து கொண்டு இருந்தது. பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இதேபோல் ''பலுசிஸ்தான் விடுதலை வேண்டும்'' என்று பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக விமானத்தின் மூலம் போஸ்டர் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன கோபம்

என்ன கோபம்

இதுதான் பிசிசிஐ அமைப்பை கோபம் அடைய செய்தது. இதனால் பிசிசிஐ ஐசிசி அமைப்பிடம் இது தொடர்பாக புகார் அளித்தது. இன்னொரு முறை இந்தியா விளையாடும் போட்டியில் இப்படி நடக்க கூடாது என்று பிசிசிஐ ஐசிசி அமைப்பிடம் புகார் அளித்தது. தற்போது இது தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

தடை

தடை

அதன்படி தற்போது இந்தியா நியூசிலாந்து போட்டி நடக்கும் மான்செஸ்டர் மைதானத்திற்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து விமானத்துறையின் அனுமதியுடன் இந்த தடையை விதித்துள்ளது. அதோடு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதேபோல் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, July 9, 2019, 16:45 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+