Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொட கூட முடியவில்லை.. திட்டம் போட்டு திணற வைத்த பும்ரா - புவி.. உலகக் கோப்பையில் அசாத்திய சாதனை!

Recommended Video

திணற வைத்த பும்ரா - புவி.. உலகக் கோப்பையில் அசாத்திய சாதனை!

லண்டன்: இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக திணறி வருகிறார்கள்.

உலகக் கோப்பை செமி பைனல் போட்டிகள் தற்போது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது செமி பைனல் போட்டி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. நியூசிலாந்து இந்திய அணியின் பவுலிங் எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.

யோசனை

யோசனை

இந்த போட்டியில் முதலில் களமிறங்கும் அணி அதிக அளவில் ரன்களை குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. முதலில் இங்கு களமிறங்கும் அணி எப்போதும் 250+ ரன்களை குறைந்த பட்சம் எடுக்கும். சமயங்களில் இந்த மான்செஸ்டர் மைதானத்தில் 300+ ரன்களை கூட எளிதாக எடுக்கலாம். ஆனால் நியூசிலாந்து அணியால் அதை செய்ய முடியவில்லை.

காரணம்

காரணம்

இதற்கு காரணம் இந்திய அணியின் ஸ்பீட் பவுலிங் ஜோடிதான். முதல் 10 ஓவர்களில் இந்திய பவுலர்கள் பும்ரா, புவனேஷ்வர்குமாரின் ஒரு பந்தை கூட நியூசிலாந்து வீரர்களால் தொட கூட முடியவில்லை. அதிலும் பும்ரா பந்தை நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் தொட வேண்டும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. முதல் மூன்று ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

சூப்பர்

சூப்பர்

அடுத்த ஓவரிலேயே நியூசிலாந்து அணியின் குப்தில் தனது விக்கெட்டை இழந்தார். பும்ரா ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் போடப்பட்ட 6 ஓவர்களிலும் பும்ரா - புவி கொஞ்சம் கூட நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் அடிக்க வாய்ப்பு கொடுக்கவே இல்லை. இந்த 10 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரிதான் போனது.

முடிந்தது

முடிந்தது

அதிலும் முதல் பவர் பிளேயில் போடப்பட்ட 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 27 ரன்கள்தான் கொடுத்தது. அதில் 1 விக்கெட் எடுத்தது. இதன் மூலம் முதல் பவர் பிளேயில் மிக சிறந்த ஓவர் போட்ட அணி என்ற சிறப்பை இந்தியா பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்திலும் இந்திய அணிதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

அதேபோல் இடையில் 19-29 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. 72 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி கூட செல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு இந்திய பவுலிங் நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி குறைந்தபட்சம் 230 ரன்கள் எடுப்பதே சந்தேகம்தான் என்கிறார்கள்.

Story first published: Tuesday, July 9, 2019, 17:38 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+