Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடித்தது லக்.. இந்தியா பக்கம் வீசும் காற்று.. செமி பைனலில் கலக்க இதை விட வேறு வாய்ப்பு கிடைக்காது!

Recommended Video

World Cup 2019 : Semi-Final : Ind Vs Nz :செமி பைனலில் கலக்க இதை விட வேறு வாய்ப்பு கிடைக்காது!-வீடியோ

லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் செமி பைனல் போட்டி நடக்க உள்ள நிலையில், இந்தியாவிற்கு சாதகமான சூழ்நிலை தற்போது உருவாகி வருகிறது. நாளை மான்செஸ்டர் மைதானத்தில் மழை பெய்யவில்லை என்றால் கண்டிப்பாக இந்தியா வெற்றிபெற வாய்ப்புள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மூன்று அணிகள் நல்ல பவுலிங் ஆர்டருடன் களமிறங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து. இந்த மூன்று அணிகளும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு இருக்கிறது.

இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே இந்தியா அதிகம் செலுத்தி வருகிறது. முக்கியமாக இந்திய அணியின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். பும்ரா பந்து வீச்சில் முன்னிலையில் இருக்கிறார். புவனேஷ்வர்குமார், ஷமி இருவரும் பந்து வீச்சில் தெறிக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நியூசிலாந்து எப்படி

நியூசிலாந்து எப்படி

அதேபோல்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும். இனி இந்த உலகக் கோப்பை தொடரில் நடக்க உள்ள கடைசி மூன்று போட்டிகளிலும் பவுலர்கள்தான் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. நியூசிலாந்தின் முன்னணி பவுலர் டிரெண்ட் போல்ட் மிக மிக சிறப்பாக இந்த முறை பார்மில் இருக்கிறார். இவரின் வேகப்பந்து வீச்சை சமாளிப்பது மிகவும் கடினமான விஷயம் ஆகும். இந்திய வீரர்களுக்கு அவர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

யார்

யார்

இந்திய அணிக்கு இன்னொரு நியூசிலாந்து பவுலர் லோகி பெர்குசான் பெரிய அச்சுறுத்தலாக இருக்க போகிறார் என்கிறார்கள். ஏனென்றால் இந்த உலகக் கோப்பை தொடரில், லோகிதான் அதிக டாட் பந்து மற்றும் விக்கெட்டுகளை எடுக்கும் வீரராக இருக்கிறார். அதிக விக்கெட் எடுக்கும் வீரர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

என்ன பலம்

என்ன பலம்

இந்த நியூசிலாந்து பவுலர்கள் பலம் என்று பார்த்தால் அது கண்டிப்பாக ஸ்விங்தான். யார்க்கர் பந்துகளை விட லோகி பெர்குசான், போல்ட் இருவரும் ஸ்விங் பந்துகளை நம்பித்தான் இருக்கிறார்கள். அங்குதான் மான்செஸ்டர் மைதானம் இவர்களுக்கு செக் வைத்து உள்ளது. மான்செஸ்டர் மைதானத்தில் பந்துகள் சுத்தமாக ஸ்விங் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி முடியும்

எப்படி முடியும்

இங்கு எப்படி பந்து போட்டாலும் பெரிய அளவில் ஸ்விங் செய்ய முடியாது. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி கண்டிப்பாக 280+ ரன்களை எளிதாக எடுக்க முடியும். நல்ல பேட்டிங் ஆர்டர் இருந்தால் 300+ ரன்களை கூட எடுக்க முடியும். ஆனால் இரண்டாவது களமிறங்கும் அணி 250+ ரன்களை எடுப்பதே கடினம். இங்குதான் மேற்கு இந்திய தீவுகளை இந்தியா 200 ரன்கள் கூட எடுக்க விடமால் சுருட்டியது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இதே மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகளை விக்கெட் எடுக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினார்கள். 291 ரன்கள் எடுத்த நியூசிலாந்து, இதே பிட்சில் மேற்கு இந்திய தீவுகளை 286 ரன்கள் வரை அடிக்க விட்டது, கடைசி நொடியில்தான் நியூஸி வெற்றிபெற்றது. இங்கு பெரிய அளவில் நியூசிலாந்து பவுலிங் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

இதனால் இந்திய அணி ஸ்விங் பந்துகளை நம்பாமல் யார்க்கர், ஸ்லோ பால், பவுன்சர் என்று விளையாடினால் கண்டிப்பாக வெற்றியை ருசிக்க முடியும். இதனால் நாளைய போட்டியில் பும்ரா, பாண்டியா ஆகியோர் அணியில் அதிக முக்கியத்துவம் பெறுவார்கள். ஷமி அணியில் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக அதிக விக்கெட் எடுக்க வாய்ப்புள்ளது.

Story first published: Monday, July 8, 2019, 14:36 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+