Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு சதிதான் காரணம்.. இந்திய அணியை மொத்தமாக முடக்கிய இரவு.. நேற்று முதல் நாள் என்ன நடந்தது?

Recommended Video

World Cup 2019 : உலக கோப்பையில் இருந்து இந்தியாவை காலி செய்த ஒரே இரவு- வீடியோ

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தோல்வி அடைய நிறைய காரணங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான காரணம் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று உலகக் கோப்பை செமி பைனல் போட்டி நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்திய அணியின் ரசிகர்களை இந்த தோல்வி பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி நழுவ விட்டுள்ளது.

மழை

மழை

போட்டி நடந்த மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானம் முதல்நாள் பேட்டிங் பிடிக்க சாதகமாக இருந்தது. அதாவது நியூசிலாந்து பேட்டிங் செய்த செவ்வாய் கிழமை, பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலை நிலவியது. ஆனாலும் இந்திய அணியின் சிறப்பான பவுலிங் காரணமாக பெரிய அளவில் அன்று ரன் செல்லவில்லை.

நேற்று என்ன

நேற்று என்ன

ஆனால் நேற்று பிட்ச் மொத்தமாக பவுலிங் பிட்சாக மாறி இருக்கிறது. பிட்ச் காயும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மழை காரணமாக பிட்ச் காயவில்லை. இதனால் பிட்ச் முழுக்க முழுக்க பவுலிங் பிட்சாக மாறியது.

இரவு மழை

இரவு மழை

இரவு முழுக்க நேற்று முதல் நாள் மான்செஸ்டரில் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பிட்ச் காயாமல் இருந்துள்ளது. இரவு முழுக்க மழை பெய்யாமல் இருந்திருந்தால், பிட்ச் காலையில் இந்தியா பேட்டிங் செய்யும் போது காய்ந்து பேட்டிங் செய்ய வசதியாக மாறி இருக்கும். ஆனால் மழை இந்தியாவிற்கு எதிராக கடுமையாக சதி செய்தது.

மிக மோசம்

மிக மோசம்

இது நேற்று நியூசிலாந்து பேட்டிங் செய்த கடைசி நான்கு ஓவரிலேயே தெரிந்தது. அந்த கடைசி நான்கு ஓவரில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அதேதான் இந்திய அணி பேட்டிங் செய்யும் போதும் தொடர்ந்தது. ஆனால் போக போக பிட்ச் கொஞ்சம் காய்ந்ததால் பேட்டிங் செய்ய வசதியாக இருந்தது.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

அதுதான் ஜடேஜா, தோனி பேட்டிங் செய்யும் போது இந்திய அணிக்கு உதவியது. ஒருவேளை நேற்று முதல் நாள் இரவு மழை பெய்யாமல் இருந்து, பிட்ச் கொஞ்சம் சீக்கிரமே காய்ந்து இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தியா சரியாக பேட்டிங் செய்து, வென்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 11, 2019, 13:57 [IST]
Other articles published on Jul 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+