Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோசம்.. சரமாரியாக தாக்கிக்கொண்டு சண்டை.. உலகக் கோப்பையில் நேற்று நடந்த திடுக் சம்பவம்!

லண்டன்: நேற்று நடந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்றது.

முக்கியமான பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கும், ஆப்கானிஸ்தான் அணியும் பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் நேற்று நடந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றி

வெற்றி

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 227 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் மிகவும் நிதானமாக ஆடியது. மொத்தம் 49.4 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 230 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் செமி பைனலுக்கான கனவை அந்த அணி தக்க வைத்துள்ளது.

சண்டை

சண்டை

இந்த போட்டி நடக்கும் போதே மைதானத்தில் வேறு ஒரு முக்கியமான சம்பவம் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் ரசிகர்களுக்கு இடையில் சண்டை நடைபெற்றது. இரண்டு அணியை சேர்ந்த ரசிகர்களும் நேற்று மைதானத்தில் போட்டியை பார்க்கும் போது மாறி மாறி தாக்கிக் கொண்டார்கள்.

10 பேர் சண்டை

10 பேர் சண்டை

சுமார் 10 பேர் இந்த சண்டையில் ஈடுபட்டார்கள். எதிர் வீரர்களை குறித்து இரண்டு நாட்டு ரசிகர்களும் மாறி மாறி தவறாக பேசி உள்ளனர். இதனால் ஏற்பட்ட வாய் தகராறு நேற்று சண்டையில் முடிந்து இருக்கிறது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தூக்கிக்கொண்டு சண்டை போட்டனர். இது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் கூட காண்பிக்கப்பட்டது. இதனால் இந்த சண்டை பெரிய வைரலானது.

வெளியே சென்றனர்

வெளியே சென்றனர்

இதனால் அங்கு வந்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்த ரசிகர்களை குண்டு கட்டாக வெளியே கொண்டு சென்றனர். ஆனால் இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இவர்களை காவலர்கள் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினார்கள். ஆனால் இவர்கள் மேற்கொண்டு போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 30, 2019, 9:54 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+