For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கொடுத்த ஸ்பெஷல் பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது!

இந்திய அணியின் மூத்த வீரர் தோனி பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

லண்டன்: இந்திய அணியின் மூத்த வீரர் தோனி பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்திய அணியின் எதிர்காலமே இந்த புகைப்படத்தில்தான் இருக்கிறது என்று எல்லோரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் தங்களை நேருக்கு நேர் சந்திக்கிறது. இந்த தொடரில் நடக்கும் மிக முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாட்டை சேர்ந்த வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள்.

 என்ன பயிற்சி

என்ன பயிற்சி

மழை காரணமாக வீரர்கள் பெரிய அளவில் வெளியில் பயிற்சி எடுக்க முடியவில்லை. பெரும்பாலும் வீரர்கள் உள் அரங்கில்தான் தங்கள் பயிற்சியை மேற்கொண்டார்கள். சில மணி நேரம் மட்டும் இரண்டு நாட்டு வீரர்களும் வெளியே மைதானத்தில் பயிற்சி செய்தார்கள்.

சூப்பர்

இந்த நிலையில் வெளியே பயிற்சி செய்யும் போது தோனி, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்கும் பயிற்சி அளித்தார். நீண்ட நேரம் இவர்கள் இருவருக்கும் தோனி பயிற்சி அளித்தார். கீப்பிங்கில் அவர் பயன்படுத்தும் டெக்னீக்குகளை சொல்லிக் கொடுத்தார்.

பண்ட் எப்படி

தினேஷ் கார்த்திக் பயிற்சி முடித்து சென்ற பின், பண்ட் தொடர்ந்து தோனியிடம் பயிற்சி மேற்கொண்டார். அவரிடம் நிறைய கேள்வி கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொண்டார். தோனிதான் பண்டிற்கு ரோல் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது . தோனி செய்யும் காரியங்களை பண்ட் பலமுறை செய்ய முயற்சி செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைரலாகி உள்ளது

தற்போது இவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படம் வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி எப்படியும் ஓய்வு பெறுவார். அதன்பின் அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் இருவரில் ஒருவர் களமிறங்கி விளையாடுவார்கள். அதனால், இந்த புகைப்படம்தான் இந்திய அணியின் எதிர்காலம் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணியின் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Sunday, June 16, 2019, 10:35 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
ICC World Cup 2019: Photos Dhoni giving special practice becomes viral in Social Media ahead of Pakistan match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+