Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டிக்கு நடுவே ஓடி வந்த மர்ம நபர்.. மைதானத்திற்குள் பெயில்ஸ் திருட்டு.. பாதுகாவலர்கள் அதிர்ச்சி!

லண்டன்: இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மைதானத்திற்குள் நடந்த திருட்டு முயற்சி பெரிய வைரலாகி இருக்கிறது.

இந்த 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக வலுவான அணிகள் மோதும் போட்டிகள் அதிக வைரலாகிறது.

நேற்று நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் குப்தீல் ஹிட் விக்கெட் ஆனதும் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. இப்படி வரிசையாக கிரிக்கெட் போட்டிகளில் நிறைய வைரல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

என்ன போட்டி

என்ன போட்டி

இந்த நிலையில் நேற்று முதல் நாள் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்து இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மிக மோசம்

மிக மோசம்

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பீல்டிங் செய்து இருந்த போது, ஒரு இளைஞர் மைதானத்திற்குள் வேகமாக ஓடி வந்தார். வெள்ளை நிற டீ சர்ட் அணிந்து இருந்த இவர், வேகமாக ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேனை நோக்கி ஓடி வந்தார். இவரை பார்த்ததும் பாதுகாவலர்கள் அவரை துரத்திக் கொண்டு ஓடி வந்தனர்.

செய்தது என்ன

செய்தது என்ன

இந்த நிலையில் வேகமாக ஓடி வந்த அந்த இளைஞர், ஸ்டம்ப் மீது இருக்கும் பெயில்களை எடுத்து தன் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டார். அதன்பின் ஸ்டம்பை எடுக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அதற்குள் அங்கு பாதுகாவலர்கள் வர தொடங்கினார்கள்.

விசாரணை

விசாரணை

இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் வேகமாக அங்கிருந்து மீண்டும் ரசிகர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார். அவரை காவலர்கள் நீண்ட நேரம் தேடி பின் கண்டுபிடித்தனர். அவர் இங்கிலாந்து அணியின் ரசிகர் என்று தெரிய வந்துள்ளது. பெயில்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, June 20, 2019, 13:29 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+