ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்?
லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் யார் எல்லாம் களமிறங்க போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக எழுந்து உள்ளது. இந்திய அணியின் பிளெயிங் லெவன் எப்படி இருக்க போகிறது என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணிதான் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணி. களமிறங்கிய அனைத்து போட்டியிலும் வெற்றிபெற்ற ஒரே அணி இந்த தொடரில் இந்தியா மட்டும்தான்.
வரிசையாக வெற்றிகளை குவித்துக் கொண்டு வந்த நியூசிலாந்து அணி நேற்றுதான் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால் இன்று இந்தியா வெற்றிபெறுமா, தோல்வி அடையுமா என்பது பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

மாற்றம்
இன்று நடக்கும் இந்தியா மேற்கு இந்திய தீவுகள் போட்டியில் இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் கண்டிப்பாக மாற்றம் இருக்காது. புவனேஷ்வர் குமார் நல்ல உடல் தகுதியை நிரூபித்து உள்ளார். அவர் பயிற்சியிலும் ஈடுப்பட்டார். ஆனால் அவர் கண்டிப்பாக இன்று விளையாட மாட்டார். இதனால் இன்றும் ஷமி, குல்தீப், சாஹல், பும்ரா ஆகியோர்தான் மெயின் பவுலர்கள்.

விஜய் சங்கர் எப்படி
அதேபோல் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் என்ற பெயரில் இணைந்து பெரிய அளவில் இதுவரை பங்களிப்பு செய்யாத வீரர்தான் விஜய் சங்கர். இவருக்கு இந்திய அணி போதுமான அளவில் வாய்ப்புகளை வழங்கி பார்த்துவிட்டது. ஆனால் இவர் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. கோலி கடந்த போட்டியிலேயே இவருக்கு பவுலிங் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன மாற்றம்
அதனால் இன்று இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதில் தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். தினேஷ் கார்த்திக் ஆல் ரவுண்டர் கிடையாது. அவர் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன். இதனால் 4வது வீரரா பேட்ஸ்மேன் ஒருவர் இறங்குவது சரியாக இருக்கும் என்று இவரை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறீர்கள். இவர் தோனிக்கு உள்ள பிரஷரை குறைப்பார்.

என்ன மாற்றம்
இதனால் இன்று விளையாடும் அணியில் பெரும்பாலும் கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, தினேஷ் கார்த்திக், தோனி, பாண்டியா, கேதார் ஜாதவ், பும்ரா, ஷமி, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இருக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

பிளெயிங் லெவன்
இதனால் இன்று விளையாடும் அணியில் பெரும்பாலும் கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, தினேஷ் கார்த்திக், தோனி, பாண்டியா, கேதார் ஜாதவ், பும்ரா, ஷமி, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இருக்க்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.


Click it and Unblock the Notifications