Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கு டீ கப் தானே வேணும்.. இந்தாங்க.. பாகிஸ்தானுக்கு பூனம் பாண்டே பதிலடி.. சர்ச்சை வீடியோ!

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | POONAM PANDEY | பாகிஸ்தானுக்கு பூனம் பாண்டே பதிலடி, சர்ச்சை வீடியோ!

லண்டன்: இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் நாட்டில் வெளியான வீடியோ ஒன்றுக்கு தற்போது இந்தியாவை சேர்ந்த நடிகை பூனம் பாண்டே பதில் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றையும் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக உலகக் கோப்பை தொடர் என்றால் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போது நடக்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். இந்த போட்டியில் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்கிறது.

இதற்காக அணிகள் தயாராவது எப்படியோ அதேபோல்தான் விளம்பர நிறுவனங்களும் தயாராவது வழக்கம்.

என்ன வைரல்

என்ன வைரல்

பொதுவாக இந்த விளம்பர பிரச்சனையை வைரலாக்கியது யார் என்றால் அது இந்தியாதான். முதலில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்யும் விதமாக ''மோக்கா மோக்கா'' என்ற விளம்பரத்தை சென்ற 2011 உலகக் கோப்பை போட்டியில் அறிமுகப்படுத்தியது. அது இப்போதும் தொடர்கிறது.

என்ன பதிலடி

என்ன பதிலடி

இதற்கு தற்போது பாகிஸ்தான் மீடியாக்கள் பதிலடி கொடுத்து இருக்கிறது. அதன்படி பாகிஸ்தான் மீடியா ஒன்றில் இந்திய விமானப்படை விங்மேன் அபிநந்தன் குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. இவர் பாகிஸ்தானில் சிக்கியது குறித்த வீடியோ ஆகும் அது. அதில் அபிநந்தன் போன்ற நபர், இந்திய கிரிக்கெட் அணியின் உடையில் இருக்கிறார். அவர் பாகிஸ்தான் கேட்கும் கேள்விகளுக்கு '' மன்னிக்கவும் என்னால் சொல்ல முடியாது'' என்று பதில் சொல்கிறார்.

டீ கப்

டீ கப்

பின் அவர் டீ நன்றாக இருக்கிறது என்று பாகிஸ்தானியர்களிடம் தெரிவிக்கிறார். கடைசியில் டீ குடித்துக் கொண்டு இருக்கும் அவர்.. பாகிஸ்தானியர்கள் போக சொன்னதும் டீ கப்பை கையோடு எடுத்து செல்கிறார். இதை பாகிஸ்தானியர்கள் தடுத்து டீ கப்பை திரும்ப கேட்கிறார்கள். அதன்பின் ''இந்த முறை கப்பை கொடுக்க மாட்டோம்'' என்று விளம்பரத்தை முடிக்கிறார்கள்.

வைரல் பதில்

வைரல் பதில்

இந்த மோசமான விளம்பரம் பெரிய சர்ச்சையானது. இதற்குத்தான் தற்போது இந்தி நடிகை பூனம் பாண்டே பதில் அளித்துள்ளார். அதில் பூனம் பாண்டே உங்களுக்கு டீ கப் தானே வேண்டும். என்னிடம் டீ கப் வைத்த உள்ளாடை இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள், அதை வெளியே எடுத்து கட்டுவது போல வீடியோ வெளியிட்டு உள்ளார். பூனம் பாண்டே இப்படி அடிக்கடி வீடியோ வெளியிட்டு சர்ச்சைக்கு உள்ளாகும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசம்

மிக மோசம்

தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் இந்த மோசமான வீடியோவும் சர்ச்சையாகி உள்ளது. பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 14, 2019, 11:56 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+