For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்.. இந்திய அணியில் இணையும் ஆல் ரவுண்டர்.. இன்றைய பிளேயிங் 11 இதுதானா?

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசம் அணிக்கு எதிராக விளையாட போகும் இந்திய அணியின் 11 பேர் கொண்ட உத்தேச லிஸ்ட் வெளியாகி உள்ளது.

Recommended Video

WORLD CUP 2019: IND VS BAN | வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசம் அணிக்கு எதிராக விளையாட போகும் இந்திய அணியின் 11 பேர் கொண்ட உத்தேச லிஸ்ட் வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் எல்லோரும் எதிர்பார்த்த அந்த போட்டி இன்று நடக்க போகிறது. ஒரு காலத்தில் பூனையாக இருந்த வங்கதேசம் இப்போது உண்மையில் புலியாக மாறி உள்ளது.

இந்த உலகக் கோப்பையில் அந்த அணி எப்படியாவது செமி பைனலுக்கு நுழைந்து விட முடியாதா என்ற போராடிக்கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்றால், அந்த அணி எப்படியாவது செமி பைனலுக்கு சென்றுவிடும்.

அதனால்

அதனால்

அதனால் இன்று நடக்கும் போட்டி வங்கதேசம் அணிக்கு வாழ்வா சாவா போட்டி ஆகும். அதே சமயம் இந்திய அணிக்கு இன்றைய போட்டி அல்லது அடுத்த இலங்கைக்கு எதிரான போட்டி இரண்டில் ஏதாவது ஒன்றில் வெல்ல வேண்டும். ஆனால் இந்தியா இலங்கைக்கு எதிராக ரிஸ்க் எடுக்காது. பெரும்பாலும் இன்றைய போட்டியில் வெல்லவே இந்தியா அதிகம் முயலும்.

இந்திய அணியில்

இந்திய அணியில்

இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்கிறார்கள். ஆனால் மிகச்சிறிய அளவில் சில மாற்றங்கள் மட்டும் இந்திய அணியில் செய்யப்படும். இந்திய அணியின் மிடில் ஆர்டரின் பலத்தை கூட்டும் வகையில் சில மாற்றங்கள் இன்று செய்யப்படும் என்று கூறுகிறார்கள். கடந்த போட்டிகளில் இந்தியா சொதப்பியதை அடுத்து இந்த மாற்றங்கள் செய்யப்படலாம்.

என்ன சொதப்பல்

என்ன சொதப்பல்

இந்திய அணியில் முதல் 5 வீரர்கள் தற்போது பிரச்சனை இல்லை. அதன்பின் களமிறங்கும் தோனியுடன் அதிரடியாக ஆட சரியான வீரர் இல்லை. இதனால் 5 வீரர்கள் அவுட்டான பின் இந்திய அணியின் ரன் ரேட் மோசமாக குறைந்து விடுகிறது. 7வது வீரராக களமிறங்கும் கேதார் ஜாதவ் இந்திய அணியில் பெரிய அளவில் அதிரடியாக ஆடுவதில்லை .

யார்

யார்

ஆனால் இவர் இந்திய அணிக்கு முக்கிய ஸ்பின் ஆப்ஷனாக இருக்கிறார் . குல்தீப், சாஹல் இருவரில் ஒருவர் காயம் அடைந்தால், இவர்தான் அவர்களின் ஓவரை போட வேண்டும் . ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஜடேஜா நன்றாக ஸ்பின் செய்ய கூடியவர். அதேபோல் தேவையான நேரத்தில் அதிரடியாகவும் ஆட கூடியவர்.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

இதனால் இன்று ஜடேஜாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். இன்று விளையாட போகும் இந்திய அணியின் உத்தேச பிளெயிங் லெவன் இதுதான்: கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பண்ட், பாண்டியா, தோனி, ஜடேஜா, ஷமி, பும்ரா,சாஹல், குல்தீப்.

Story first published: Tuesday, July 2, 2019, 13:12 [IST]
Other articles published on Jul 2, 2019
English summary
ICC World Cup 2019: Predicted playing eleven of team India against Bangladesh team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+