Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 மாற்றங்கள்.. பேட்டிங் ஆர்டரில் நடக்கும் அதிரடி சேஞ்ச்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதானா?

Recommended Video

World Cup 2019 : Ind Vs SL : சொன்னபடி செய்த கோலி.. அணியில் செய்த மாற்றம்- வீடியோ

லண்டன்: இலங்கை அணிக்கு எதிராக இன்று களமிறங்க போகும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இன்று இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடக்கும் உலகக் கோப்பை லீக் போட்டி இந்திய அணிக்கு செமி பைனலுக்கான ஒரு வார்ம் அப் மேட்ச் போன்றது. இன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் பெரும்பாலும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும்.

இந்தியா செமி பைனலில் யாரை எதிர்கொள்ள போகிறது என்று இன்று தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றம்

மாற்றம்

இன்று பெரும்பாலும் இந்திய அணி வித்தியாசமான பிளெயிங் லெவனுடன் களமிறங்கும் என்று கூறுகிறார்கள். இந்திய அணிக்குள் இரண்டு விதமான மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள். முக்கியமாக பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டரிலும் மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சோதனை முயற்சியாக அணிக்குள் இந்த மாற்றங்கள் நடக்கும்.

யாரெல்லாம் நீக்கம்

யாரெல்லாம் நீக்கம்

இன்று இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதன்படி தினேஷ் கார்த்திக் இன்றைய போட்டியில் ஆட மாட்டார். மேலும் முகமது ஷமிக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள். ஷமி அதிகமாக விக்கெட் எடுத்தாலும் கடைசி நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது இல்லை.

யார் சேர்ப்பு

யார் சேர்ப்பு

அதன்படி இந்திய அணிக்குள் இன்று தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் மயங்க் அகர்வால் சேர்க்கப்படலாம். இவர் பெரும்பாலும் தொடக்க வீரராக களமிறங்குவார். கே எல் ராகுல் 4வது வீரராக மீண்டும் களமிறங்கி விளையாடுவார் என்று கூறுகிறார்கள். அதேபோல் அணிக்குள் ஜடேஜா களமிறங்கி ஷமிக்கு பதில் விளையாடுவார் என்று கூறுகிறார்கள்.

என்ன அணி

என்ன அணி

அதன்படி இன்று இலங்கைக்கு எதிராக விளையாடும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான்: மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, கோலி, கே எல் ராகுல், பண்ட், தோனி, பாண்டியா, ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, July 6, 2019, 11:14 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+