மழையால் தொடர்ந்து தடைபடும் இந்திய ஆட்டங்கள்.. குறையும் புள்ளிகள்.. செமி பைனல் கனவு பறிபோகிறதா?
லண்டன்: தொடர் மழையால் இந்திய அணியின் ஆட்டங்கள் அடுத்தடுத்த தடை ஆவதை அடுத்து, இந்திய அணியின் புள்ளிகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இது இந்திய அணியின் செமி பைனல் வாய்ப்பை சிக்கலுக்கு உள்ளாக்க வாய்ப்புள்ளது.
இங்கிலாந்தில் ஏன் ஐசிசி தனது கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்ததோ தெரியாது.. ஆனால் அவர்கள் திட்டமிட்ட எதுவும் சரியாக நடக்கவில்லை என்பது மட்டும் உண்மை. ஆம் இந்த உலகக் கோப்பைதொடர்தான் இதுவரை வரலாற்றில் நடந்த மிக மோசமான உலகக் கோப்பை தொடராக இருக்கும்.
தொடர்ந்து இங்கிலாந்தில் பெய்து வரும் மழை காரணமாக, உலகக் கோப்பை போட்டிகள் ரத்தாகி வருகிறது. இது ஒரு வகையில் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி மோசம்
இங்கிலாந்தில் மழை காரணமாக வரிசையாக போட்டிகள் ரத்தாகி வருகிறது. மொத்தம் 4 போட்டிகள் இந்த தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக நேற்று நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது .

தொடர வாய்ப்புள்ளது
அங்கு இன்னும் மழை தொடரும் என்று வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து இருக்கிறார்கள். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று நடக்கும் பாகிஸ்தான் இந்தியா போட்டியும் மழையால் ரத்தாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

முக்கியம்
இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியா போட்டி மழையால் ரத்தானால் இரண்டு அணிக்கும் ஒரு புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். அப்படி கிடைக்கும் பட்சத்தில் இந்திய அணி 6 புள்ளிகள் பெறும். ஆனால் ரன் ரெட் அடிப்படையில் தொடர்ந்து நான்காவது இடத்திலேயே தொடரும்.

இன்னும் சிக்கல்
அதேபோல் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வரும் 22ம் தேதியும், மேற்கு இந்திய தீவுகளை 27ம் தேதியும் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரண்டு போட்டி நடக்கும் நாளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இதிலும் புள்ளிகளை இந்திய அணி இழக்க வாய்ப்புள்ளது.

எப்படி சிக்கல்
இந்திய அணியானது நியூசிலாந்து , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் அணியிடம் வென்று 8 புள்ளிகள் பெற்று இருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக 4 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் தேவை இல்லாமல் 4 புள்ளிகளை இழந்து ரன் ரேட்டிலும் மாற்றம் ஏற்படாத நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மோசம் என்ன
அதே சமயம் இலங்கை அணி இப்போதே நான்கு புள்ளிகளுடன் இருக்கிறது. இதனால வரும் போட்டிகளில் இலங்கை அணி வரிசையாக வென்றால் இந்திய அணியை எளிதாக புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்த முடியும். தற்போது 5வது இடத்தில் இருக்கும் இலங்கை வரிசையாக வென்றால் இந்திய அணியை 5க்கு தள்ளிவிட்டு, 4 வது இடத்தை பெற வாய்ப்புள்ளது.

மிக சிக்கல்
இதனால் வலுவான அணியாக இருந்தாலும் மழையால் இந்திய அணி பின்னடைவை சந்திக்கலாம். இந்தியா செமி பைனலுக்கு செல்ல முடியாத நிலை கூட ஏற்படலாம். இனி வரும் ஆட்டங்களில் வானிலை எப்படி விளையாடுகிறது என்பதை பொறுத்தே நிலைமை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications