இந்த 4 பேர்தான் பிரச்சனை.. பழியை போட்ட ரவி சாஸ்திரி.. தோல்வியை தொடர்ந்து இந்திய அணிக்குள் குழப்பம்?
Recommended Video
லண்டன்: இந்திய அணியில் சில வீரர்கள் சரியாக ஆடவில்லை, மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்தியா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதனால் இந்தியாவின் உலகக் கோப்பை பயணம் முடிவிற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். தோல்விக்கான காரணங்களை அவர் அடுக்கி இருக்கிறார்.

என்ன பேட்டி
அவர் தனது பேட்டியில், நாங்கள்தான் இப்போதும் உலகில் சிறந்த அணி. அன்று ஒருநாள் எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லை. அன்று சரியாக ஆடி இருந்தால் ஆட்டம் எங்கள் கைக்கு வந்திருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் நிறைய தவறுகள் நடந்துவிட்டது.

காரணம் என்ன
எங்கள் அணியின் மிடில் ஆர்டர் சரியாக இல்லை. நாங்கள் எதிர்பார்த்த சில வீரர்கள் சரியாக ஆடவில்லை. முக்கியமான 4 வீரர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் இது எங்கள் அணியில் பிரச்சனையை உண்டாக்காது. நாங்கள் இதிலிருந்து பாடம் கற்றுள்ளோம், என்று குறிப்பிட்டார்.

யார்
ஆனால் ரவி சாஸ்திரி யார் மீது பிரச்சனை, யார் மீது தவறு என்று நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனாலும் அவர் கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், பண்ட் ஆகியோரைத்தான் சொல்கிறார் என்று விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் நான்கு பேருமே இந்த உலகக் கோப்பை தொடரில் சரியாக ஆடவில்லை.

கே எல் ராகுல்
முக்கியமாக கே எல் ராகுல் இந்த தொடரில் இலங்கை, வங்கதேசம் போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே ஆடினார். பெரிய அணிகள் எதிராக மிக மோசமாக ஆடினார். கடைசி போட்டியிலும் அவர் 1 ரன்களில் அவுட்டானார்.

தினேஷ் கார்த்திக்
அதேபோல் தினேஷ் கார்த்திக் மூன்று போட்டிகளில் விளையாடினார். இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்தார். ஆனால் எதிலும் அவர் சரியாக விளையாடவில்லை. தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் நழுவ விட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

பண்ட் எப்படி
விஜய் சங்கருக்கு பதிலாக அணிக்குள் வந்த பண்ட் கொஞ்சம் நன்றாகவே ஆடினார். ஆனால் அவர் பல இடங்களில் பொறுப்பில்லாமல் ஆடி முக்கியமான நேரங்களில் அவுட்டானார். அவர் அவுட்டானது எல்லாம் தேவையில்லாத ஷாட்களை அடித்ததால் விழுந்த விக்கெட்டுகள்தான். இவரின் பொறுப்பில்லாத பேட்டிங் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.

குல்தீப் யாதவ்
அதேபோல் இந்த தொடரில் சரியாக விக்கெட் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவ் சரியாக பந்து வீசவில்லை. அதிக ரன்கள் கொடுத்தார். இந்த தொடர் முழுக்க குல்தீப் யாதவ் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தார். இந்த 4 வீரர்களைத்தான் ரவி சாஸ்திரி மறைமுகமாக குற்றஞ்சாட்டி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications