For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்கள் கதை முடிந்தது.. நேற்று போட்டியில் நடந்த சம்பவம்.. அம்பதி ராயுடு ஓய்வை அறிவிக்க இதுவே காரணம்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அம்பதி ராயுடு ஓய்வை அறிவிக்க முக்கிய காரணம் இருக்கிறது.

Recommended Video

WORLD CUP 2019: Rayudu retires : தொடர் புறக்கணிப்பால் கோபம்!.. ஓய்வை அறிவித்தார் ராயுடு!- வீடியோ

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அம்பதி ராயுடு ஓய்வை அறிவிக்க முக்கிய காரணம் இருக்கிறது. இதற்கு பின் நிறைய அரசியல் காரணங்கள், அழுத்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அம்பதி ராயுடு கிரிக்கெட் வாழ்க்கை என்பது நிறைய சிக்கல்கள் நிரம்பியது ஆகும். சரியாக ஆடிக்கொண்டு இருந்து இவர் ரஞ்சி கோப்பையில் இருந்து இந்திய அணிக்கு தேர்வாக தயாராக இருந்தார்.

அப்போதுதான் ஐசிஎல் தொடங்கப்பட்டது. இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற இந்த தொடர் ''ஸீ'' நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. இதில் இந்திய அணி என்ற லீக் அணியில் அம்பதி ராயுடு இணைந்தார்.

ஐசிசி எதிர்ப்பு

ஐசிசி எதிர்ப்பு

இந்த தொடருக்கு ஐசிசி, பிசிசிஐ இரண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. இதில் இணைந்ததால் கபில் தேவை கூட, பிசிசிஐ பதவியில் இருந்து காலி செய்து வீட்டிற்கு அனுப்பியது. இதில் விளையாடியதால் அம்பதி ராயுடுவை இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்தது. அவர் பீக்கில் இருந்த நேரத்தில் இதனால் சிக்கலுக்கு உள்ளானார்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

அதன்பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இவர் அடையாளம் காணப்பட்டார். இந்திய அணிக்காக 35 போட்டிகளில் விளையாடினர். கடைசியாக உலகக் கோப்பை போட்டிக்கு இவர் தேர்வாக போகிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இவருக்கு பதில் விஜய் சங்கர் தேர்வானார். இதற்கு விஜய் சங்கர் ஒரு 3டி வீரர், நன்றாக ஆடுவார் என்று தேர்வு வாரியம் பதில் சொன்னது.

என்ன கிண்டல்

என்ன கிண்டல்

இதை அம்பதி ராயுடு கிண்டல் செய்து இருந்தார். நான் உலகக் கோப்பை போட்டியை 3டி கண்ணாடி அணிந்து கொண்டு பார்ப்பேன் என்று கிண்டல் செய்தார். இதுதான் பிசிசிஐ அமைப்பை சீண்டியது. எங்களையே கிண்டல் செய்கிறார் இவர் என்று கோபம் கொண்டது. இதனால் விஜய் சங்கர் காயம் அடைந்த போதும் கூட அம்பதி ராயுடுவை பிசிசிஐ அழைக்கவில்லை. அதற்கு பதிலாக ரிஷப் பண்டை அழைத்தது.

மோசம்

மோசம்

இதன் பின் இந்திய அணிக்குள் மயங்க் அகர்வால் கொண்டு வரப்பட்டார். இது ராயுடுவிற்கு இன்னும் கோபத்தை அளித்தது. இந்த நிலையில் நேற்று போட்டியில் ரிஷப் பண்ட் மிகவும் அதிரடியாக ஆடினார். இவர் 48 ரன்கள் எடுத்தார். இதனால் 4வது இடத்திற்கு நிலையான வீரராக பண்ட் தேர்வாக போகிறார் என்று கூறுகிறார்கள். இந்த போட்டிக்கு பின்பே அம்பதி ராயுடு தனது ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.

அவ்வளவுதான்

அவ்வளவுதான்

அம்பதி ராயுடுவின் கதை முடிந்தது. அவரால் அணிக்குள் வர முடியாது என்று நேற்றே பலர் விமர்சனம் செய்து இருந்தனர். தற்போது தொடர் விமர்சனங்கள், புறக்கணிப்புகளால் மொத்தமாக சர்வதேச போட்டிகளில் இருந்து அம்பதி ராயுடு ஓய்வை அறிவித்துள்ளார்.

Story first published: Wednesday, July 3, 2019, 13:58 [IST]
Other articles published on Jul 3, 2019
English summary
ICC World Cup 2019: The real reason for Ambati Rayudu's retirement from cricket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+