Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

15 வருட உழைப்பு, கனவு எல்லாம் முடிவிற்கு வருகிறது? இவரின் நிலைமை எந்த இந்திய வீரருக்கும் வர கூடாது!

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் இந்த முக்கிய வீரரின் நிலைமை மட்டும் உலகில் எந்த ஒரு வீரருக்கும் வரவே கூடாது. என்னதான் திறமை இருந்தாலும் இவருக்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பது கிடையாது கிடையாது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடக்கிறது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டு இருக்கிறார். இதனால் தற்போது இந்திய அணிக்குள் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

சேர்க்கவில்லை

சேர்க்கவில்லை

இந்திய அணிக்குள் எப்படியும் இன்று மாற்றம் நடக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள். விஜய் சங்கர் கண்டிப்பாக நீக்கப்படுவார் என்று நினைத்தார்கள். அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் வருவார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக இந்திய அணியில் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

என்ன மோசம்

என்ன மோசம்

இதனால் இந்திய அணியின் மிக முக்கியமான வீரரான தினேஷ் கார்த்திக் உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியிலாவது விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா பெரும்பாலும் இனி வரும் போட்டிகளில் பண்டை வைத்தே விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு கானல் நீர் ஆகியுள்ளது.

இனி

இனி

தினேஷ் கார்த்திக் 2004ல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். கீப்பராக அறிமுகம் ஆன இவர் தோனியின் வருகைக்கு பின் அணியில் இடம்பெற முடியவில்லை. இவர் இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பையில்தான் தன்னுடைய திறமையையும் நிரூபித்தார். ஆனாலும் இவர் உலகக் கோப்பை தொடரில் இப்போது வரை களமிறக்கப்படவில்லை. இனியும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.

15 வருடம்

15 வருடம்

இவருக்கு இப்போதே 34 வயதாகிவிட்டது. இவர் 15 வருடமாக உலகக் கோப்பையில் களமிறங்க காத்து இருக்கிறார். அடுத்த உலகக் கோப்பையில் இவர் ஆட மாட்டார். 2007ல் ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற உலகக் கோப்பை அணியில் இவர் இடம்பெற்று இருந்தார். ஆனால் அப்போதும் அவருக்கு அணியில் களமிறங்கி விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறையும் அதே போல நடப்பது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

திறமையானவர்

திறமையானவர்

இவர் திறமையான வீரர். அதே சமயம் இவருக்கு நிறைய அனுபவமும் இருக்கிறது. ஆனாலும் கூடாது இவருக்கு போதுமான வாய்ப்பும் அதிர்ஷ்டமும் இல்லை. இந்திய அணியில் இருக்கும் இந்த முக்கிய வீரரின் நிலைமை மட்டும் உலகில் எந்த ஒரு வீரருக்கும் வரவே கூடாது. செமி பைனல் உட்பட இனி வரும் போட்டிகள் கடினமான போட்டிகள் என்பதால் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெறுவது கடினம் என்பதே களநிலவரம்.

Story first published: Sunday, June 30, 2019, 15:51 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+