Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் வந்ததே போதும்.. பிரச்சனை தீர்ந்தது.. வாவ் தோனிக்கு கூட இத்தனை வரவேற்பு இருந்தது இல்லை!

லண்டன்: இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் வீரர் ரிஷப் பண்டிற்கு பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடக்கிறது. இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறது.

இங்கு பெரும்பாலும் பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது கடினமான விஷயம் ஆகும். போட்டி நடக்கும் பிர்மிங்ஹாம் மைதானம் பவுலிங் பிட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்திய அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டு இருக்கிறார். கடந்த மூன்று போட்டிகளில் இவர் இந்திய அணிக்காக விளையாடினார். நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடிய இவர் தொடர்ந்து சொதப்பி வந்தார். முக்கியமாக மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இவர் மோசமாக விளையாடினார். இதனால் இவர் நீக்கப்பட்டுள்ளார்.

அணிக்குள் வந்தார்

அணிக்குள் வந்தார்

இதனால் தற்போது இந்திய அணிக்குள் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு சொந்த ஊர் ஹரித்வார் ஆகும். இவருக்கு தற்போது 21 வயதுதான் ஆகிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஒருநாள் போட்டியில் இதுவரை இவர் சதமோ அரைசதமோ அடித்தது இல்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் இவர் மிகவும் சிறப்பாக ஆடினார். டெல்லி அணிக்காக இவர் மிகவும் அதிரடியாக ஆடினார். அதனால் தற்போது இவருக்கு அணிக்குள் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இவர் வந்த பின் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவேற்பு

வரவேற்பு

இன்று ரிஷப் பண்ட் பெயரை சொன்னதும் மைதானமே அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது. தோனியின் பெயரை சொன்னால் எப்படி ரசிகர்கள் கத்துவார்களோ அதே அளவிற்கு சமமாக ரிஷப் பண்ட் பெயரை கேட்டதும் ரசிகர்கள் கத்தினார்கள். இவர் வந்ததால் அணிக்கு புதிய பலம் கிடைக்கும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

Story first published: Sunday, June 30, 2019, 15:20 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+