For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசை இல்லை அண்ணாச்சி பசி.. பாக். பவுலர்களை பந்தாடி செஞ்சுரி.. ரோஹித் செய்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்!

பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய ரோஹித் சர்மா அதிரடியாக செஞ்சுரி போட்டு அசத்தி இருக்கிறார்.

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | பாக். பவுலர்களை பந்தாடி ரோஹித் அடித்த சதம்

லண்டன்: பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய ரோஹித் சர்மா அதிரடியாக செஞ்சுரி போட்டு அசத்தி இருக்கிறார். செஞ்சுரி போட்ட பின்பும் தொடர்ந்து ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி வருகிறார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் உலகக் கோப்பை லீக் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாகிஸ்தான் பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

நிதானமா ஆட்டம்

நிதானமா ஆட்டம்

இந்திய அணி தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடி வருகிறது. பவுலிங் பிட்சாக இருந்தாலும் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் கே எல் ராகுல் இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். கே எல் ராகுல் பொறுமையாக ஆடினார். அவர் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். இதில் 2 சிக்ஸர் அடக்கம். அதேபோல் 3 பவுண்டரி அடக்கம்.

மாற்றம் அதிரடி

மாற்றம் அதிரடி

அதன்பின் ராகுல் ரியாஸ் பந்தில், பாபர் ஆஸமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா உறுதியாக நின்றார். ரோஹித் சர்மா தனது அதிரடியை தொடங்கினார். விறுவிறுப்பாக ஆட தொடங்கிய ரோஹித் வந்த பந்துகளை எல்லாம் காட்டு காட்டு என்று காட்டினார். வெறும் 35 பந்துகளில் அரைசதம் அடைத்தார்.

என்ன அடி

என்ன அடி

அதன்பின் அதிரடியாக தொடர்ந்து சிக்ஸ் பவுண்டரி என்று ஆடி வருகிறார். முக்கியமாக எல்லோரும் பயந்த வஹாப் மற்றும் அமீர் பந்துகளை கூட ரோஹித் சர்மா புரட்டி எடுத்தார். அதேபோல் ஹசன் அலி, சதாப் கான் பந்துகளையும் பறக்கவிட்டார். வரிசையாக எல்லோரும் பந்துகளையும் எனக்கு கவலையே இல்லை என்று டீல் செய்தார்.

மிக அசால்ட்

மிக அசால்ட்

எப்போதும் முதல் 100 ரன்களை மெதுவாக எடுக்கும் ரோஹித் சர்மா, இந்த முறை 3வது ஓவரில் இருந்தே அதிரடியாக ஆடினார். 84 பந்துகளிலேயே செஞ்சுரி கடந்து வேகமாக அடிக்க தொடங்கினார். 85 ரன்கள் இருக்கும் போது கூட''நான் ஆஸ்திரேலியா பவுலர்களையே தெறிக்க விட்டவன்'' என்று கூச்சலிட்டு சிக்ஸ் அடித்தார்.

என்ன சாதனை

என்ன சாதனை

தற்போது 101 பந்துக்கு 119 ரன்கள் எடுத்து 3 சிக்ஸர், 11 பவுண்டரி என்று ஆடி வருகிறார். இது ரோஹித் சர்மாவின் 24வது ஒருநாள் செஞ்சுரி ஆகும். 203 போட்டிகளில் அவர் இந்த சதையை செய்துள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் அவருக்கு இது இரண்டாவது செஞ்சுரி ஆகும்.

Story first published: Sunday, June 16, 2019, 17:25 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
ICC World Cup 2019: India opener Rohit Hits his 24th century against Pakistan in today's match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+