For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பையில் முதல்முறை இப்படி நடக்கும்.. இப்போதே திட்டமிட்ட ரோஹித்.. அடுத்த போட்டியில் மாஸ்தான்

இந்திய அணி விளையாடும் அடுத்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.

லண்டன்: இந்திய அணி விளையாடும் அடுத்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க திட்டமிட்டு இருக்கிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு திருப்பங்கள், பல்வேறு சுவாரசியங்களுடன் நடந்து வருகிறது. முக்கியமாக இந்தியா மோதும் போட்டிகள் எல்லாம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை இந்தியா மோதிய 3 போட்டிகளில் மூன்றிலும் வென்றுள்ளது. ஒரு போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணிகள் மழையால் தலா ஒரு புள்ளிகளை பெற்றுள்ளது.

கடந்த போட்டி

கடந்த போட்டி

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அவர் அதிரடியாக ஆடிவந்தார். இந்த இன்னிங்சில் 14 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடக்கம்.

என்ன திட்டம்

என்ன திட்டம்

200 ரன்கள் அடிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் தேவையில்லாத ஸ்வீப் அடிக்க முயற்சி செய்து அவர் அவுட்டானார். அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் பெரும்பாலும் பாகிஸ்தான் பவுலிங் செய்த விதத்திற்கு 200 ரன்கள் எடுத்திருக்க கூட வாய்ப்புள்ளது. 140 ரன்களில் அவுட்டான கோபத்தில் கத்திவிட்டு சென்றார்.

நேற்று என்ன

நேற்று என்ன

இந்த நிலையில்தான் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து போட்டியில் அதிசயமான சம்பவம் ஒன்று நடந்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மோர்கன் 17 சிக்ஸர், 4 பவுண்டரி அடித்தார். ஒருநாள் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் அடித்த அதிக சிக்ஸ் இதுதான். அவர் இந்த போட்டியில் 148 ரன்கள் எடுத்தார்.

செம பாஸ்

செம பாஸ்

இவர் 4வது வீரராக இறங்கி இந்த சாதனையை செய்து இருக்கிறார். அதிலும் இவர் 35வது ஓவரில் களமிறங்கி 15 ஓவரில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இவர் கொஞ்சம் சீக்கிரமே இறங்கி இருந்தால் பெரும்பாலும் 200 ரன்கள் அடித்திருக்க வாய்ப்புள்ளது.

வாய்ப்புள்ளது

வாய்ப்புள்ளது

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடக்கும் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். போன போட்டியிலேயே அவர் இரட்டை சதம் அடிக்க முயற்சி செய்தார். இதனால் அடுத்த போட்டியில் கண்டிப்பாக அவர் இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

முதல்முறை இப்படி

முதல்முறை இப்படி

உலகிலேயே மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டும்தான். அதேபோல் உலகக் கோப்பை போட்டியிலும் அவர் இரட்டை சதம் அடித்தால், உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பாக முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன் சச்சின், சேவாக் இருவரும் இரட்டை சதம் அடித்து இருக்கிறார்கள். அதேபோல் உலகக் கோப்பை போட்டியில் குப்தீல் மற்றும் கெயில் இரட்டை சதம் அடித்து இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, June 19, 2019, 18:16 [IST]
Other articles published on Jun 19, 2019
English summary
ICC World Cup 2019: Rohit mass plan for the next world cup match against AFG.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+