For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ரெக்கார்ட் பாருங்க.. இனி ரோஹித்தான் கேப்டன்.. கோலி மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ திட்டம்?

இந்திய அணியின் கேப்டன் கோலி எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வருகிறது.

Recommended Video

WORLD CUP 2019 | கோலி மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ திட்டம்?

லண்டன்: இந்திய அணியின் கேப்டன் கோலி எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி இருக்கிறது. இது இந்திய அணிக்குள் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

முக்கியமாக பிசிசிஐ அமைப்பு இந்திய அணி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், கேப்டன் விராட் கோலி ஆகியோர் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

சந்திப்பு நடக்கும்

சந்திப்பு நடக்கும்

இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து பிசிசிஐ அமைப்பு வீரர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது. அதேபோல் கோலி மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடனும் மீட்டிங் நடத்த இருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை இதில் ஆலோசிக்க இருக்கிறார்கள்.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

இந்த ஆலோசனைக்கு பின் இந்திய அணியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். அதன்படி விராட் கோலியை அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை அணியின் கேப்டனாக மாற்ற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்த தொடர்களில் எல்லாம் இந்தியா வென்றுள்ளது. கோலி இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ஆனாலும் அவர் தலைமையில் இந்திய அணியில் இதுவரை பெரிய கோப்பைகளை வென்றது இல்லை.

இன்னும் அப்படித்தான்

இன்னும் அப்படித்தான்

இன்னும் கோலி தோனியை நம்பித்தான் இருக்கிறார். ஆனால் ரோஹித் சர்மா சுயமாக முடிவு எடுப்பது கோலியை விட ஒரு படி முன்னே இருப்பதாக தெரிகிறது. ரோஹித் சர்மாவிடம் கோலியை விட கேப்டன்சி செய்ய நிறைய நுணுக்கங்கள் தெரிகிறது. ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்றுள்ளார். இதுவே அவரின் தலைமைக்கு சிறந்த சான்று என்கிறார்கள்.

வாய்ப்புள்ளது

வாய்ப்புள்ளது

இதனால் பிசிசிஐ மீட்டிங் முடிந்த பின் இந்திய அணிக்குள் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம். ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது. கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டும் தொடர்வார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, July 14, 2019, 8:06 [IST]
Other articles published on Jul 14, 2019
English summary
ICC World Cup 2019: Rohit Sharma may lead the white ball team soon after Kohli's loss.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+