For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று என்னுடைய நாள்.. உலகக் கோப்பையில் அசாத்திய சாதனை நிகழ்த்த ரோஹித் பிளான்.. இதுதான் பாஸ்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டு வருவதாக கூறுகிறீர்கள்.

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டு வருவதாக கூறுகிறீர்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி பல வகையில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இதனால்தான் இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் கூட ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சாதனை

என்ன சாதனை

உலகிலேயே மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டும்தான். இவர் அடித்த 264 ரன்கள்தான் ஒருநாள் போட்டியில் தனி நபர் அடித்த அதிக ரன். இதனால் ஒருநாள் போட்டியில் உலகிலேயே ஒரே போட்டியில் ரோஹித் சர்மா அசைக்க முடியாத சக்தியாகி இருக்கிறார். இவர் இரண்டு இரட்டை சதங்களை இலங்கைக்கு எதிராகவும், ஒரு இரட்டை சதத்தை ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் அடித்து இருக்கிறார்.

வேறு யார்

வேறு யார்

இதற்கு முன் சச்சின், சேவாக் இருவரும் இரட்டை சதம் அடித்து இருக்கிறார்கள். இந்திய அணியில்தான் உலகிலேயே மூன்று வீரர்கள் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து இருப்பது. இது இல்லாமல் மேற்கு இந்திய தீவுகள் வீரர் கெயில் மற்றும் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தீல் ஆகியோரும் உலகக் கோப்பை போட்டிகளில் இரட்டை சதம் அடித்து இருக்கிறார்கள்.

இன்று அடிப்பார்

இன்று அடிப்பார்

இதனால் ரோஹித் சர்மா உலகக் கோப்பை போட்டியில் இன்று இரட்டை சதம் அடித்தால், உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பாக முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். ரோஹித் சர்மா இதற்காக திட்டம்போட்டு செயல்பட்டு வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.

எப்படி இருக்கிறது

எப்படி இருக்கிறது

ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 140 ரன்களை எடுத்தார். அப்போதே அவருக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இயான் மோர்கன் 148 ரன்களை எடுத்து 17 சிக்ஸர் வேறு அடித்தார். இதனால் இயான் மோர்கனின் ஸ்டைலை பின்பற்றி இன்று ரோஹித் இரட்டை சதம் அடிக்க போகிறார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Saturday, June 22, 2019, 8:33 [IST]
Other articles published on Jun 22, 2019
English summary
ICC World Cup 2019: Rohit plans to hit double century today against Afghanistan team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+