Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த ஒரு இந்திய வீரரும் செய்யாத சாதனை.. புதிய உயரம் தொட்ட ஹிட்மேன் சர்மா.. என்ன தெரியுமா?

Recommended Video

WORLD CUP 2019 IND VS BAN | ஒரே நாளில் 2 சாதனைகள்! புதிய உயரம் தொட்ட ரோஹித் சர்மா

லண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிராக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கிறது.

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் அதிரடியாக ஆடினார்கள். இவர்களின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்தியாவின் ரன் ரேட் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மா அதிரடியாக ஆடினார். வரிசையாக சிக்ஸ், பவுண்டரி என்று தெறிக்கவிட்டார். ஸ்பின் பவுலர், ஸ்பீட் பவுலர் என்று யாரையும் கருத்தில் கொள்ளாமல் வரிசையாக எல்லோர் பந்திலும் பவுண்டரிகளை பறக்கவிட்டார். அவர் அரை சதம் கடந்த போதே கண்டிப்பாக சதம் அடிக்க போகிறார் என்பது தெரிந்தது.

எத்தனை சதம்

எத்தனை சதம்

இந்த நிலையில் 92 பந்துகள் பிடித்த ரோஹித் சர்மா 104 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ்கள் அடக்கம். இவர் இரட்டை சதம் அடிப்பார் என்று கருதப்பட்ட நிலையில், தேவையில்லாத ஷாட் அடித்து 29.2 ஓவரில் சவுமியா சர்க்கார் பந்தில் அவுட்டானார். கவர் திசையில் ரோஹித் அடித்த பந்தை லித்தோன் தாஸ் பிடித்தார்.

என்ன சாதனை

என்ன சாதனை

இதற்கு முன் ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் அடித்தார். இதன் மூலம் ரோஹித் சர்மா உலகக் கோப்பை தொடரில் நான்கு சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்று சாதனையை செய்து இருக்கிறார்.

வேறு யார்

வேறு யார்

இதற்கு முன் உலகில் ஒரே வீரர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளார். அது இலங்கை வீரர் குமார் சங்ககாரா. 2015 உலகக் கோப்பையில் இவர் 4 சதங்களை அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 2, 2019, 18:14 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+