Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு இது பெரிய இழப்பு.. தலையில் கை வைத்து கதறி அழுத ரோஹித்.. கண்ணீருக்கு பின் சோக காரணம்!

Recommended Video

WORLD CUP 2019 : ROHIT CRYING | அவருக்கு இது பெரிய இழப்பு! அழுத ரோஹித்..கண்ணீருக்கு சோக காரணம்!

லண்டன்: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் செமி பைனல் போட்டி பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோசமான தோல்வியை நேற்றைய போட்டியில் சந்தித்தது.

ரோஹித் சர்மா, கோலி, கே எல் ராகுல் என்று முக்கியமான தொடக்க வீரர்கள் எல்லோரும் 1 ரன்களில் அவுட்டானது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இந்த போட்டி கடைசி நொடியில் இந்திய அணியின் கையைவிட்டு போனது. தோனி அவுட்டாகி சென்ற போதே களத்திலேயே உடைந்து அழுதார். அதன்பின் கோலியும் பெவிலியனில் இருக்கும் போதே கண்ணீருடன் இருந்தார் .

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இதெல்லாம் போக ரோஹித் சர்மா தலையில் கை வைத்து எல்லோருக்கும் தெரிவது போல வெளிப்படையாக கதறி அழுதார். ரோஹித் சர்மா கண்ணீர்விட்டு அழுததுதான் பெரிய வைரலாகி உள்ளது. பலர் அந்த வீடியோவை வருத்தத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஏன்

ஏன்

இந்த போட்டி ரோஹித் சர்மாவிற்கு கொஞ்சம் ஸ்பெஷலான போட்டி. அவர் ஆடிய மிக முக்கியமான உலகக் கோப்பை போட்டி இது. 2011ல் அவர் விளையாடவில்லை. அப்போது இருந்த கோபத்தை ரோஹித் சர்மா இந்த தொடரில் தொடர்ந்து காட்டினார்.

போச்சு

போச்சு

முக்கியமாக இந்த தொடரில் அவர் ஐந்து செஞ்சுரி அடித்தார். அதோடு அவரே உலகக் கோப்பை தொடர்பா பேட்டி அளித்து இருந்தார், இந்த உலகக் கோப்பை நாங்கள் வெல்ல வேண்டும். தோனிக்கு இந்த உலகக் கோப்பையை நாங்கள் கொடுக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்து எப்படி

அடுத்து எப்படி

ரோஹித் சர்மாவிற்கு தற்போது 32 வயதாகிறது. அடுத்த உலகக் கோப்பை தொடரின் போது அவர் அணியின் மூத்த வீரராக இருப்பார். ஆனால் அப்போதும் இதேபோல் நல்ல பார்மில் இருப்பாரா என்பது சந்தேகம்தான். இதெல்லாம் சேர்த்துதான் அவரை நேற்று உடைந்து அழ வைத்து இருக்கிறது.

Story first published: Thursday, July 11, 2019, 8:52 [IST]
Other articles published on Jul 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+